அமெரிக்கா: அமெரிக்காவில் உள்ள இண்டியான மாகாணத்தில் உள்ள வால்பரைசோ எனும் பகுதியில் ஜெனிபர் மற்றும் வில்சன் இவர்களுக்கு வயது 48 ஆகும். மேலும் இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் டகோடா லெவி ஸ்டீவன்ஸ் மேலும் குழந்தை தத்தெடுத்தஉள்ளனர். மேலும் அந்த குழந்தைக்கு தற்போது 6 வயது ஆகும். நிலையில் தனது வளர்ப்பு மகனையே கொன்ற தாய் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்ற வருடம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி போலீசாருக்கு ஒரு அவசர அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய ஜெனிபர் ஸ்டீவன்ஸ் சுயநின் சுயநினைவு இன்றி மயக்க நிலையில் கிடைக்கிறான் என்று போலீசாரிடம் கூறியுள்ளார். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஸ்டீவன்சை பார்த்த போது அவர் இறந்த நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரது கழுத்து மற்றும் மார்பு பகுதியில் காயங்கள் இருந்தது தெரிந்துள்ளது.
இதனைப் பற்றி ஜெனிபரிடம் காவல்துறையினர் விசாரித்த போது, ஸ்டீபன்ஸ் வீட்டிலே சரியாக இருப்பதில்லை பக்கத்து வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறான் அதனால் நான் கண்டித்தேன். மேலும் வெளியே போக அடம் பிடித்ததனால் அவன் மேலே ஏறி உட்கார்ந்து அவனை தடுத்து நிறுத்தினேன். பின்பு பார்த்தபோது ஸ்டீவன்ஸ் மயங்கி கிடந்ததை கண்டு உங்களுக்கு தொடர்பு கொண்டேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
154 kg எடையுள்ள அந்தப் பெண் அந்த ஆறு வயது சிறுவன் மீது ஐந்து நிமிடங்கள் உட்கார்ந்து உள்ளார். இவ்வளவு எடை பாரத்தை தாங்க முடியாத அச்சிறுவன் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார். மேலும் அவர் உடம்பில் உள் காயங்களும் உள்ளது.
இந்த சம்பவத்தை பற்றி பக்கத்து வீட்டாரிடம் கேட்டபொழுது அந்தக் குழந்தை வழக்கம் போல உங்கள் வீட்டிற்கு விளையாட வந்தது என்னை தயவு செய்து நீங்கள் தத்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியது. ஏன் என்று கேட்டதற்கு எனது பெற்றோர் என்னை அடிக்கிறார்கள் என்னால் அவர்களிடம் இருக்க முடியவில்லை என்று கூறினான். மேலும் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஜெனிபர் வந்து அவர்களைக் கூட்டிக்கொண்டு போய்விட்டார்.
மேலும் இந்த வழக்கு கோர்ட் விசாரித்த போது சிறுவன் வெளியே ஓடிவிட கூடாது என்ற நோக்கத்தில் தான் அவன் மீது அமர்ந்ததாக ஜெனிபர் கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்