எட்டாவதாக உருவாகும் புதிய கண்டம்!! பசிபிக் பெருங்கடலின் நிலை என்ன?? ஆய்வாளர்கள் கண்டுபிடித்த அதிசயம்!!

The eighth new continent to emerge

பெய்ஜிங்: உலகின் மிகப் பழமையான பசிபிக் பெருங்கடல் முழுமையாக வறண்டு விடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பூமியின் எட்டாவது கண்டம் உருவாக கூடும் என்றும் தெரிவித்துள்ளனர். பூமியின் தோற்றம் குறித்து உலகெங்கும் பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகிறது. அதன்படி ஆஸ்திரேலியாவில் உள்ள கர்டின் பல்கலைக்கழகம் மற்றும் சீனாவில் உள்ள பீக்கிங் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து சூப்பர் கம்யூனிட்டி மாடலை பயன்படுத்தி ஆய்வு செய்தனர்.

அடுத்த 200 முதல் 300 மில்லியன் ஆண்டுகளுக்குள் ஒரு புதிய சூப்பர் கண்டம் உருவாக கூடும் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி பசிபிக் பெருங்கடல் வறண்டு சுருங்கிய நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளனர். நீர் முழுமையாக மற்றும் பொழுது பூமியின் டெக்னிக் தகடுகள் ஒன்றிணைந்து புதிய நிலப்பரப்பு உருவாக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியா முதலில் ஆசியாவுடன் மோதி அதன் பிறகு பசிபிக் பெருங்கடல் மூடப்படும். அப்போது அமெரிக்கா ஆசியாவுடன் இணையும் என்று கூறுகிறார்கள்

சூப்பர் கண்ட சுழற்சி என்று பூமியின் கண்டங்கள் ஒன்றை ஒன்று மோதிக் கொள்ளும் நிகழ்வு மீண்டும் நடக்கவிருக்கிறது . டாக்டர் ஹுவாங் கூறுகையில் டெக்டானிக் தகடுகள் எவ்வாறு நகர்கிறது என்பதை சூப்பர் கம்ப்யூட்டரை பயன்படுத்தி கண்காணிக்கிறோம். 300 மில்லியன் ஆண்டுகளில் பசிபிக் பெருங்கடல் மூடவும் அமாசியா கண்டம் உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram