சேலம்: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த புனல்வாசு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் என்பவர். இவரின் மூத்த மகன் கதிரவன் என்பவர். கதிரவன் கார் சர்வீஸ் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். தந்தை மற்றும் மகன் இருவருக்குமே மது அருந்தும் பழக்கம் உள்ளது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே புனல்வாசல் பகுதியில் சேர்ந்தவர் கண்ணன் இவருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அவரது மூத்த மகன் கதிரவனுக்கு 21 வயது.
மது பழக்கத்தால் மதுவை வாங்கி வந்து குளிர்பானத்தில் கலந்து மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் கவரில் வைப்பது வழக்கம் என கூறப்படுகிறது. இதை கவனித்த கதிரவனின் தந்தை மதுவை கொஞ்சம் குடித்துவிட்டு தண்ணீரை கலந்து வைத்து விடுவாராம். நேற்று முன்தினம் வழக்கம்போல் மதுவை குடித்துவிட்டு பெட்ரோல் டேங்க் கவரில் தண்ணீரை கலந்து வைத்திருக்கிறார்.
பெட்ரோல் டேங்கில் இருந்து மதுவை மகனும் எடுத்துக் குடித்திருக்கிறார். சற்று நேரத்தில் கதிரவன் வாந்தி எடுத்துள்ளார். வீட்டில் இருந்தவர்கள் வந்து கேட்ட பொழுது, என்னை குடிகாரன் என்றும், எனக்கு யாரும் பெண் தர மாட்டார்கள் என்பதாலும், மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டேன் என்று கூறியுள்ளார். அதைக் கேட்ட தந்தை அதிர்ச்சியடைந்துள்ளார்.
நானும் தான் அந்த மதுவை குடித்தேன் என்று கூறியுள்ளார் கண்ணன். கூறியதை அடுத்து தந்தை-மகன் இருவரையும் ஆத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் தந்தை இறந்துவிட்டார். மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கினை கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.