மக்கள் தொகையை சீராக சமாளிக்க பல்வேறு நாடுகள் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இப்படியாகத்தான் தற்பொழுது இத்தாலி நாடும் இத்தனை நாட்டில் இருக்கக்கூடிய இளைஞர்களின் வரவுகளை அதிகரிக்கவும் குடியேற்றத்தை அதிகரிக்கவும் முடிவு செய்து முக்கிய முடிவு ஒன்றினை எடுத்து இருக்கிறது.
அதன்படி, பேய் கிராமங்கள் என அழைக்கப்படும் இத்தாலியின் வரையறுக்கப்பட்ட கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு 92 லட்சம் மானியமாக அரசால் வழங்கப்படும் என்றும் அதில் 18 லட்சம் புதிய சொத்துக்களை வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மீதம் இருக்கக்கூடிய பணத்தினை வைத்து அங்கு இருக்கக்கூடிய வீடுகளை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் இத்தாலி அரசு தெரிவித்திருக்கிறது.
தங்களுடைய நாட்டில் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாலும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஓய்வூதியம் சுகாதார பராமரிப்பு போன்ற அத்தியாவசிய தேவைகளின் அளவு அதிகரிப்பதாலும் நாட்டை சீரான பாதையில் கொண்டு செல்வதற்கு இத்தாலி இது போன்ற ஒரு முக்கிய முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. இது மட்டுமின்றி பல நகரங்கள் மக்கள் புடை சூழ இருந்தாலும் கிராமங்களும் மக்கள் வாழ்வாதாரமானது குறைந்து கொண்டே வருவதால் அதனை தடுக்கும் முயற்சியாக தற்போது இத்தாலி இதுபோன்ற முடிவை மேற்கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கான விதிமுறைகள் :-
✓ இதுபோன்று கிராமங்களில் குடியேற நினைப்பவர்கள் கட்டாயமாக இத்தாலி நாட்டை சேர்ந்தவர் ஆகவோ அல்லது இத்தாலி நாட்டின் வம்சாவளியாகவோ இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ அரசினுடைய மானியத்தை பெற்று புதுப்பிக்கக்கூடிய வீடுகளில் கட்டாயமாக பத்து ஆண்டுகள் தங்க வேண்டுமென்றும் அல்லது 10 ஆண்டுகளுக்கு வாடகைக்கு விட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ மேற்கூறியதை பின்பற்றவில்லை என்றால் அரசினுடைய 92 லட்சம் மானியம் உடனடியாக பெற்றுக்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.