விஜய் டிவியின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா. இவர் வெள்ள காலகட்டத்தில் தன்னால் இயன்ற பல உதவிகளை வேலை எளிய மக்களுக்கு செய்திருக்கிறார். தன்னுடைய காமெடியால் ரசிகர்களை பெரிதளவும் கவர்ந்த பெண்மணியாக பார்க்கப்படுபவர் அறந்தாங்கி நிஷா.
திடீரென அறந்தாங்கி நிஷா அவர்கள் வெளியிட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில் அறந்தாங்கி நிஷா கோபமோடு பேசியிருப்பதாவது :-
5 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவனை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பணி புரியக்கூடிய இரண்டு சத்துணவு ஊழியர்கள் இணைந்து முட்டை கேட்டதற்காக அடித்த துன்புறுத்திய வீடியோ வைரல் ஆனதைத் தொடர்ந்து அறந்தாங்கி நிஷா அவர்கள் அந்த வீடியோவை பதிவிட்டு தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டி இருக்கிறார்.
அறந்தாங்கி நிஷா அவர்கள், மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கலாம் என்றும் அவ்வாறு அடிப்பது அவர்களை நல்வழிப்படுத்தவே என்றும் தெரிவித்ததோடு, அந்த மாணவனை அடிப்பதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ? என கேள்வி எழுப்பி இருக்கிறார். அதுவும் ஒரு முட்டைக்காக மாணவனை வாரி துன்புறுத்தி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று என்றும் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் வைத்துள்ளார். அதில், இந்த சத்துணவு ஊழியர்கள் இரண்டு பேரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அதனை தொடர்ந்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.