திருப்பூர்: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் குறிப்பாக திருப்பூரை மையம் கொண்ட வடமாநில தொழிலாளர்கள் உத்தர பிரதேசம் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தங்களுடைய குடும்பத்துடன் வந்து பணியாற்றி வருகின்றனர். இதனுடைய திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள தெக்கலூர் கிராமத்தில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது இங்கு வேலை கேட்டு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் உங்களுடன் திருப்பூருக்கு வந்துள்ளார்.
அந்த நிறுவனத்தில் இவர்களுக்கு வேலை இல்லை என கூறிவிட்ட நிலையில் மீண்டும் அவர்கள் ஒடிசா மாநிலத்திற்கு திரும்பச் செல்ல முடிவெடுத்துள்ளனர் இதனை அடுத்து இந்த தம்பதி தங்களின் குழந்தைகளுடன் திருப்பூர் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் ரயிலுக்காக நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் அங்கு வந்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் அவர்களுடன் பேசி அறிமுகம் ஆகி உள்ளனர்.
அப்போது தாங்கள் வேலை செய்யும் பனியன் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களை மீண்டும் அவிநாசி பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் இரவு நேரம் ஆகிவிட்டதால் லட்சுமி நகரில் அவர்கள் தங்கி இருந்த அறையில் அந்த தம்பதியை தங்க வைத்துள்ளனர் இரவு நேரத்தில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தங்களுடைய கொடூர திட்டத்தை வெளிப்படுத்திய மூன்று பேர் கொண்ட அந்த கும்பல் அந்த தம்பதியை கத்தி முனையில் மிரட்டி உள்ளது.
அவர்கள் போட்ட திட்டப்படி கணவரை சரமாரியாக தாக்கி கட்டிப்போட்டு மனைவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது பின்னர் இந்த சம்பவம் குறித்து வெளியே கூறினால் உங்களை கொலை செய்து விடுவோம் எனவும் அந்த கும்பல் மிரட்டி உள்ளது. ஒரு வழியாக அங்கிருந்து தப்பித்து வெளியே வந்த தம்பதி தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன்படி பாலியல் வன்கொடுமை செய்த பீகாரை சேர்ந்த மூன்று பேரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட தொடர் விசாரணைக்கு பிறகு மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். திருப்பூரில் வடமாநில பெண்ணுக்கு வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களாலேயே பாலியல் வன்கொடுமை அரங்கேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.