திமுகவில் செந்தில் பாலாஜி வழக்கு தான் தீரா பிரச்சனையாகவே இருந்து வருகிறது இது நாள் கடந்து செல்ல மேலிடத்திற்கும் அதிக அளவு அழுத்தம் கொடுக்கிறது. செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்த பொழுது அரசு வேலை வாங்கி தருவதாக லஞ்சப் பணம் பெற்றதாக இவர் மீது வழக்கு தொடுத்து ஓராண்டு காலத்திற்கு மேலாக சிறைவாசம் அனுபவித்தார்.
தற்சமயம் பல நிபந்தனைகளுடன் கூடிய ஜாமினில் வெளிவந்த போது இவர் எதிர் தரப்பு சாட்சியங்களை விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்திடம் முறையிட்டது. அதே சமயம் இவர் சிறைவாசம் அனுபவித்து வந்த கையோடு இவருக்கு திமுகவில் மீண்டும் பதவியும் வழங்கினர்.
இவர் பதவியேற்றுதால் சாட்சியங்களை அவர் சார்பாக மிரட்டி வருவதாகவும் அதனால் அஞ்சுவதாகவும் சமீபத்தில் உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டது. இதுகுறித்து முறையான விளக்கத்தை தமிழக அரசு தான் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தனர்.
இவ்வாறு வழக்கானது முடிவில்லாமல் தொடர்ந்து வரும் நிலையில் நேற்று நீதிமன்றத்தில் வழக்கானது அமர்வுக்கு வந்தது. செந்தில் பாலாஜிக்கு எதிரான சாட்சியங்கள் ஒன்றன் பின் ஒன்றாக விசாரிக்கப்பட்டும் வந்தனர்.
தற்பொழுது இந்த வழக்கை வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மீண்டும் செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டும் என கூறியுள்ளனர். கட்டாயம் இவர் மீதான சாட்சியங்கள் உறுதியாகும் பட்சத்தில் இவரது பதவி மீண்டும் பறிபோக அதிக வாய்ப்புள்ளது என்று நீதிமன்ற வட்டார வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.





