சீனாவில் இளம்பெண்கள் “man mums” என்ற சேவையை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம், பெண்கள் தங்கள் விருப்பமான ஆண்களை 5 நிமிடங்களுக்கு கட்டிப்பிடிப்பதற்காக சுமார் ₹600 (50 யுவான்) செலுத்துகின்றனர். இந்த சேவையை “emotional healing hugs” என்றும் குறிப்பிடுகிறார்கள். இது தற்போது சீனாவின் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மன அழுத்தம் குறைக்க – சீனாவில் வேகமாக நகரும் வாழ்க்கைமுறை, வேலைபருமை, கல்விச் சுமை போன்றவை இளம்பெண்கள் இடையே அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலான இளம் பெண்கள் ஊர், வேலை, பள்ளி போன்ற காரணங்களால் குடும்பத்தை விட்டு விலகி தனியாக வாழ்கிறார்கள். அவர்களுக்கான மனநலம் ஆதரவு குறைவாக இருக்கிறது. இதற்கெனவே சிறப்பு செயலிகள் உருவாகி உள்ளன. பெண்கள் ஆண்களை தேர்வு செய்து, அவர்களுடன் நேரலை (real-time) உரையாடி, உடனடி கட்டிப்பிடி முன்பதிவு செய்கிறார்கள். HugHub, ManMum, WarmHug போன்றவை. இதில் பெண்-ஆண் இருவரும் தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தி, அங்கீகாரம் பெற்றபின் மட்டும் ஹக் நிகழும்.
பொதுவாக, வணிக வளாகங்கள், மெட்ரோ நிலையங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் ஏற்பாடு செய்யப்படுகிறது. சில மனநல மருத்தவர்கள் இதனை ‘stress-relief therapy’ என்ற அடையாளத்தில் வரவேற்கின்றனர். மன அழுத்தம் குறைக்கும், உணர்ச்சி பாசத்தை வளர்க்கும், loneliness குறைக்கும் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
ஆனால், சில சமூக ஆர்வலர்கள் இதை ஒரு ‘emotional consumerism’ எனக் கூறுகின்றனர். இந்த சேவை பெண்கள் மட்டுமின்றி ஆண்களுக்கும் உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என கூறுகின்றனர். சிலர் இதை தவறாக பயன்படுத்தி பாலியல் தொல்லை, தவறான உறவுமுறைகள் ஏற்படுத்தும் அபாயம் இருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த ஆறு மாதங்களில் இந்த சேவையை 30% அதிகமான பெண்கள் பயன்படுத்தியதாகவும், குறிப்பாக 20–35 வயதினரே இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்றும் சேவையகங்கள் தெரிவிக்கின்றன. HugHub போன்ற செயலிகள் மாதம் சுமார் 10 லட்சம் டாலர் வருமானம் ஈட்டுகிறது என்ற கூற்று சமூக ஊடகங்களில் வந்துள்ளது.“man mums” சிங்கப்பூர், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேவை, சீனாவில் தற்போது அதிகமான வரவேற்பைப் பெறுகிறது. மனநலம், தனிமை, வேகமான வாழ்க்கைமுறை ஆகியவை இதற்கு காரணமாக உள்ளன. ஆனால், இது மனித உறவுகளை வணிகரீதியில் பயன்படுத்தும் புதிய பரிமாணத்தை உருவாக்குமா, அல்லது உண்மையில் மனநல ஆதரவாக மாறுமா என்பதை காலமே நிர்ணயிக்கும்.