cricket: நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா இடையிலான போட்டியில் நடைபெற்ற சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
ipl: தொடர் இந்த மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் இரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி முதலில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கி ஜெய்ஸ்வால் 29 ரன்களில் ஆட்டமிழக்க சாம்சன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறி வந்த நிலையில் 151 ரன்கள் மட்டுமே 20 ஓவர் முடிவில் எடுத்திருந்தது. அடுத்ததாக களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் டீ காக் சிறப்பாக விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் போட்டியை முடித்து வைத்தார்.
இந்நிலையில் இரண்டாவது இன்னிங்க்சில் ராஜஸ்தான் அணி பந்து வீசிய பொது ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பந்து வீசிய போது ஒரு ரசிகர் மைதானத்திற்கு உள்ளே வந்து பராக் காலில் விழுந்தது தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. விராட் கோலி காலில் ஒரு ரசிகர் விழுந்ததை ஒப்பிட்டு வலைதளங்களில் இதும் அவும் ஒன்றா? எல்லாரும் சூனா பானா ஆகா முடியுமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.