போர் பதற்றம் காரணமாக கடந்த மே 8ஆம் தேதி நிறுத்தப்பட்ட நிலையில் ,மீண்டும் மே 17 முதல் துவங்க உள்ளது . இந்நிலையில் ,ஐபிஎல் தொடரில் சில வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளன. இந்நிலையில் , ஐபிஎல் நிர்வாகக்குழு ஒரு வீதி மாற்றத்தை செய்துள்ளது . தற்போது ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் இருந்து வெளியேறிய வெளிநாட்டு வீரர்களுக்கு பதில் தற்காலிகமாக வேறு வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது .இந்த விதிமுறை 2025ஆம் ஐபிஎல் தொடரில் மட்டுமே செல்லுபடியாகும் .
இந்த தற்காலிக வீரர்களை எந்த அணியும் அடுத்த முறை தக்க வைத்து கொள்ள முடியாது. அதன்படி ,எந்த வீரர் மற்ற போட்டிகளில் விளையாடவில்லை என்று விலகினாலும், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன் தக்க வைத்து கொள்ள நினைத்தால் தக்க வைத்துக் கொள்ளலாம் என நிர்வாக குழு அறிவிப்பு. அடுத்த ஆண்டு ஐபிஎல் தக்க வைத்து கொள்ள முடியாது என அறிவிப்பு. அவர்கள் ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்கள் .இது தான் புதிய விதி மாற்றம் என ஐபிஎல் நிர்வாக குழு அறிவித்துள்ளது. இதுபோன்ற விதி மாற்றம் ஐபிஎல் அணிகளுக்கு திருப்தி அளித்துள்ளது .
ஏனென்றால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ,டெல்லி கேபிட்டல்ஸ் ,சென்னை சூப்பர் கிங்ஸ் ,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளை சேர்ந்த சில வெளிநாட்டு வீரர்கள் மீதமுள்ள போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன .எனவே , எந்த அணியில் வீரர்கள் இல்லையோ அந்த அணிகள் மாற்று வீரர்களை தேர்வு செய்து கொள்ள முடியும் என நிர்வாக குழு அறிவித்துள்ளது .