மகா கும்பமேளா நிகழ்வு கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. நாளை அதன் நிறைவேற்ற விழா மிகப் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே விழா தொடங்கிய 45 நாட்களாக பிரக்யராஜில் கடும் வாகன நெருக்கடி ஏற்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இதுவரை ஏறத்தாழ 63 கோடிக்கும் மேற்பட்டவர்கள் கும்பமேளாவில் கலந்து கொண்டு நீராடி சென்றுள்ளனர். சிலர் நெரிசலில் இறந்தும் உள்ளனர். பல தரப்பட்ட சிக்கலை சந்தித்தாலும் விழா சிறப்பாக முன்னேறி நடைபெற்று வருகின்றது.
நாளை நிறைவு நாளை ஒட்டி எதிர்பாராத அளவுக்கு கூட்டம் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அங்கு இன்று மாலை 4 மணி முதல் வாகனங்கள் உள்ளே நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் சில கட்டுப்பாடுகளையும் கண்டிப்பான முறையில் அமுல்படுத்தி உள்ளது. பிரக்யராஜுக்கு வருபவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள நீரில் குளித்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைவரும் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க ஸ்ட்ரிட்டான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியவாசிய தேவைகளுக்கான வாகனங்கள் மற்றும் மருத்துவ சேவைகள் தொடர்ந்து வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மற்றபடி இதர வாகனங்களுக்கு தடையும், கூட்ட நெரிசல்களில் உயிர்பலி ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் போலீசார் கடைப்பிடிக்க மக்களிடம் கோரி உள்ளனர். மேலும் அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன