காப்பீடு தொகைக்காக தனது கால்களையே வெட்டிய நபர்!! கையும் களவுமாக சிக்கியது எப்படி? 

The man who cut off his legs for 5 crores

பிரிட்டன்: 5 கோடி காப்பீட்டுத் தொகை பெறுவதற்காக தனது கால்களையே வெட்டியுள்ளார். சினிமா பாணியில் உண்மையாகவே ஐந்து கோடி காப்பீட்டுத் தொகை பெறுவதற்காக விபரீத செயலில் ஈடுபட்டுள்ளதை காப்பீட்டு நிறுவனம் கண்டுபிடித்தது. பிரிட்டனில் ட்ருரோவை சேர்ந்த 49 வயது மதிக்கத்தக்க நபர் நீல் ஹாப்பர் என்பவர்.
இவர் மருத்துவமனையில் வாஸ்குலார் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டில் செப்சிஸால் தான் தனது கால்களை இழந்ததாக காப்பீட்டு நிறுவனத்தில் ரூ 5 லட்சம் பவுண்டுகள் கிடைக்கும் என்று விண்ணப்பம் அனுப்பியுள்ளார். காப்பீட்டு நிறுவனம் அதை நம்பாமல் நீல் ஹாப்பர் 5 கோடி காப்பீடு தொகைக்காக வேண்டும் என்று தனது இரண்டு கால்களையும் அகற்றியதாக கருதியது.
மேலும், மோசடி செய்ததாக நீதிமன்றத்தை அணுகியது காப்பீட்டு நிறுவனங்கள். காப்பீட்டு நிறுவனம் அளித்த புகாரில் தனக்கு ரத்த நாள பிரச்சனை இருப்பதால் முழங்கால்கள் அகற்றப்பட்டது என்றும், இது உடல் முழுவதும் பரவும் அபாயம் உள்ளதாக நம்ப வைக்க சான்றிதழ்களை காண்பித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
ரத்த நாள பிரச்சனை இருப்பதாக கூறினாலும் உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் முழங்கால்களை மட்டும் அகற்றுவது எப்படி என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 2018 ஆகஸ்ட் முதல் டிசம்பர் 2020 வரை வலைதளங்களில் இருந்து அவர் வீடியோக்களை பிரீமியம் முறையில் வாங்கியதாக கூறப்படுகிறது.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. மற்றொரு மருத்துவரின் உதவியுடன் 2 கால்களையும் எந்தவித தீங்கும் ஏற்படாது வகையில் அகற்றியுள்ளனர். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் காவல்துறையினர் நீல் ஹாப்பரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram