தீராத நோய்களை தீர்க்கும் மருந்தீஸ்வரர் கோவில் சென்னையில் திருவான்மியூர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவில் ஏழாம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட கோவிலாகும் திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற தலம் என்று கூறலாம் பண்டைய காலத்தில் மருத்துவ குணங்கள் கொண்ட பல மூலிகைகளுக்கு நடுவே ஆலயம் அமைந்திருப்பதாக தெரிகிறது லிங்கத்தின் மீது அபிஷேகம் செய்யப்படும் பால் பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது. இது பல நோய்களை தீர்க்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த கோவிலில் எப்படி பிரார்த்தனை செய்வது :
எந்த வகை உடல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சரி அந்த நோயாளியும் அல்லது அவரால் வர இயலாவிட்டால் அவருடைய பெற்றோர்களோ அல்லது கணவனோ அல்லது மனைவியோ உற்றார் உறவினரோ யார் வேண்டுமானாலும் இந்த கோவிலுக்கு வருகை தரலாம் காலையில் நீராடி விட்டு தூய ஆடைகளை அணிந்து பக்தியுடன் நம்பிக்கையுடன் இந்த கோவிலுக்கு வரவேண்டும்.
அர்ச்சனை பொருட்களை ஏற்கனவே வாங்கி வைத்துக் கொள்ள முடியாவிட்டால் கோவிலுக்கு முன்னால் கடைகளில் இருக்கும் அர்ச்சனை பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படும் பால் வாங்கிக் கொண்டு போக வேண்டும் மருந்தீஸ்வரர் சன்னதி முன் நின்று உள்ளம் உருக நோய் தீர்க்கப்பட பிரார்த்தனை செய்ய வேண்டும் பிறகு அர்ச்சகர் இடம் பால் மற்றும் அர்ச்சனை தட்டை கொடுத்து பெயர் நட்சத்திரம் சொல்லி மருந்தீஸ்வரருக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்ய வேண்டும்.
பிறகு அர்ச்சகர் கொடுக்கும் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை பிரசாதங்களை பக்தியோடு பெற்றுக் கொள்ள வேண்டும் அபிஷேக பாலை அங்கேயே மருந்தீஸ்வரர் முன்னிலையில் உட்கொள்ள வேண்டும் உடல் நலம் பாதித்தவர் வீட்டில் இருந்தால் அவருக்கு அங்கே கொண்டு சென்று கொடுத்துவிடலாம் மருந்தீஸ்வரர் தரிசனத்துக்கு பிறகு ஆலய விருட்சமான வன்னி மரத்தை மூன்று முறை சுற்றி வளம் வர வேண்டும்.
இதைப் போன்று நோயின் தன்மை பொறுத்து வாரம் ஒரு முறை என்று ஏழு வாரங்கள் வரவேண்டும் வேண்டுதல் நிறைவேறியவுடன் மருந்தீஸ்வரருக்கு அம்பிகை திரிபுரசுந்தரிக்கும் வஸ்திரம் சமர்ப்பிப்பது நன்றி தெரிவித்துக் கொள்ள வேண்டும்.
மருந்தீஸ்வரர் ஆலயத்தின் பிறவிகளை அறுக்கும் ஜென்ம நாஷினி காம குரோதங்களை விரட்டும் காமநாசினி பாவங்களை கழுவி கரைசேர்க்கும் பாபநாஷினி ஞானத்தை வழங்க வல்ல ஞானத்தாயினி மோட்சத்தை அருளும் மோட்சாதாயிணி என ஐந்து தீர்த்தங்கள் உள்ளதாக ஐதீகம் கூறுகிறது காமநாசினியும் மோட்ச தாயினியும் கிணறுகளாக அமைந்துள்ளன.கிழக்கு கோபுரம் அருகே உள்ள சித்திரம் குளம் தான் ஜென்ம நாஷினி.
கோவிலின் பெரிய திருக்குளம் பாபநாசினி.
ஞானதாயின் தீர்த்தம் பூமிக்கு அடியில் இருப்பதாக பெருமளவில் நம்பப்படுகிறது. வெளி பிரகாரத்தில் உள்ள கோசலையில் பசுக்களும் கன்று குட்டிகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. கால சந்தி, உச்சி காலம், சாயராட்சை அர்த்த ஜாமம் என்று தினமும் நான்கு கால பூஜைகள் இக்கோயிலில் நடைபெறுகின்றன பங்குனி மாதம் பிரம்மோற்சவம் கோலாலமாக கொண்டாடப்படுகிறது.