2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி பல கட்சிகள் தங்களுடைய கட்சிப் பணிகள் மற்றும் கூட்டணி குறித்த விவாதங்கள் கலந்து வருகின்றனர். ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடிய பழனிச்சாமி அவர்கள் மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்தித்து அரசியல் மற்றும் தேர்தல் குறித்த முக்கிய முடிவுகளை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாக்கின.
இது ஒரு புறம் இருக்க நிர்மலா சீதாராமன் அவர்கள் சென்னையில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கக்கூடிய இந்த தருணத்தில் செங்கோட்டையன் அவர்களை நேரில் சந்தித்த பேசியது அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையன் பழனிச்சாமியை கேட்டுவிட்டு தான் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்திக்க சென்றாரா ? அல்லது நிர்மலா சீதாராமன் அவர்களை யாருக்கும் சொல்ல வேண்டாம் என நினைத்தாரா என்பது போன்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.
எவை எப்படி சென்றாலும், செங்கோட்டையன் மற்றும் நிர்மலா சீதாராமன் இணைந்து பேசியது திமுகவின் பலம் மற்றும் பலவீனம் போன்றவற்றை யூகித்து பேசியிருக்கலாம் என்றும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்துவது குறித்த முக்கிய வியூகங்கள் வகுக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.