அரசியலில் அடுத்து களமிறங்கும் நடிகர்!! கிச்சா சுதீப் கூறியது என்ன? 

The next actor to enter politics

பெங்களூரு: கன்னட திரைப்படத் துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கிச்சா சுதீப். அவர் நடித்த முதல் படம் கிச்சா என்பதால் ரசிகர்கள் அவரை “கிச்சா சுதீப்’  என்று அன்போடு அழைக்கிறார்கள். குறிப்பாக விஜய் நடித்த “புலி” படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். “ஈ” படத்தில் வில்லனாக நடித்து தமிழ் துறையிலும் தடம் பதித்துள்ளார். நடிகர் தர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டெவில்”. டெவில் படம் விரைவில் வெளியாக உள்ளது.
இதுகுறித்து பெங்களூருவில் சுதீப் அளித்த பேட்டியில் கூறுகையில், தர்ஷன் நடிப்பில் உருவான டெவில் படத்தில் நல்லது நடக்க வேண்டும்.அவரது வேதனைகள் அவரது அவரவருக்கு தான் தெரியும். அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ள இந்த நிலையில் ஏதாவது கூறினால் தவறாக முடிந்து விடும். சட்டம் என்று வந்துவிட்டால் சட்டத்தின் படியே அரசு செயல்படும் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இதற்கு இடையில் நாம் குறுக்கே இருக்கக் கூடாது.
சரி,தவறு என கோர்ட் முடிவு செய்யும். நான் சில விஷயங்களில் தலையிட மாட்டேன். தனிப்பட்ட ஒருவரின் விஷயத்தில் நான் தலையிடுவதை விரும்பவில்லை. தர்ஷனும், நானும் 18 வயது இளைஞர்களா?, எங்களுக்கு சொந்த அறிவு கிடையாதா? நாங்கள் ஏன் பிரிந்தோம்? என எங்களுக்கு மட்டும் தான் தெரியும்.
சில நேரங்களில் என்னை அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தை சிலர் தூண்டி விடுகிறார்கள். ஆனால் எனக்கு அதில் விருப்பம் கிடையாது. தற்போதைக்கு நான் அரசியலில் வருவது சாத்தியமில்லை. அரசியலுக்கு வரும் எண்ணம் இருந்தால் அந்த எண்ணத்தில் உறுதியாக இருப்பேன். என்று செய்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram