வேலூர்: வேலூர் மாவட்டம் போலீஸ் ஸ்டேஷனில் காவலர் ஒருவரால் பரபரப்பு மற்றும் அதிர்ச்சி ஏற்பட்டது. நேற்றைய தினம் வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருந்து குடியாத்தத்தை நோக்கிச் சென்ற தனியார் ஷூ கம்பெனி பேருந்தை சேட்டு என்பவர் ஓட்டிச் சென்றார். அதற்கு எதிர் புறமாக வந்த பி .கே நகரைச் சேர்ந்த ஒருவர் திடீரென வேனை மறித்து டிரைவரிடம் சண்டை போட்டார். பின்பு அவர் சட்டை பிடித்து நான் காவல் அதிகாரி என்று கூறி அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
மேலும் அவரை பிடித்து இழுத்துக்கொண்டு கே வி குப்பம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுள்ளார். அங்கிருந்த போலீசிடம் இவன் என் மேல் வண்டி இடிக்குமாறு வந்தான் என்று கூச்சலிட்டு இவனை கைது செய்து எஃப் ஐ ஆர் போடுமாறு கூறியுள்ளார். அப்பொழுது இருவரும் விசாரித்த பொழுது வாகனத்தை ஓட்டி வந்த சேட்டு என்பவருக்கு மீது எந்த தவறும் இல்லை என்பதை தெரியவந்தது. இதன்பின் அந்த போதை ஆசாமி என் பெயர் அருண் கண்மணி நான் போலீஸ் அதிகாரி என்று கூச்சல் போட்டுள்ளார்.
இதைக் கேட்ட போலீஸ் அதிகாரிகள் அதிர்ந்து போயினர். அதன் பின் விசாரித்த போது அவர் காட்பாடி விருதம்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் அதிகாரி என்பது தெரிய வந்தது. பின்பு காவல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைக்க முற்பட்டபோது அருண் கண்மணி போதையில் தனது துணிகளை அனைத்தையும் கழட்டி விட்டு நிர்வாணமாக நின்று கொண்டு அவர் மீது எஃப் ஐ ஆர் போட்டால்தான் நான் ஆடைகளை உடுத்துவேன் என்று போலீஸ் அதிகாரிகளை மிரட்டியுள்ளார்.
இதனால் பெண் போலீஸ் அதிகாரிகள் காவல் நிலையத்தை விட்டு வெளியே ஓடினர். பின்பு அவரை எச்சரித்த போலீசார் ஆடைகளை உடுத்தும் படி அறிவுரை கூறிய பின்பும் முடியாது என்று கூறியதால் கூறியதால் அவரை லாக்கப்பில் வைத்து அடைத்தனர். பின்பு அவரை சமாதானப்படுத்தி ஆடைகளை போட வைத்து கே.வி குப்பம் போலீசார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குடி போதை பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில் அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. பின்பு அவர் மருத்துவமனை அறையின் கண்ணாடிகளை உடைத்து மற்றும் இன்றி செவிலியர்களையும் மருத்துவர்கள் தகாத வார்த்தையில் திட்டி உள்ளார். இதன்பின் பொறுமையை இழந்த கே வி குப்பம் போலீசார் இவர் மீது இரண்டு வழக்குகளை பதிவு செய்தனர். இதற்கு முன்னர் இவர் மீது இரண்டு வழக்குகள் உள்ளது. ஒன்று பானி பூரி வியாபாரியிடம் ஓசியாக சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காத சென்றதால் அவர் எஸ் பி ஆபிஸ் புகார் அளித்தார். பின்பு அவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டு இப்பொழுதுதான் பணிக்கு சேர்ந்துள்ளார். மறுபடியும் அருண் கண்மணி அவருடைய அட்டகாசத்தை நடத்தியுள்ளார்.