இந்தியாவை வம்பிழுக்கும் அதிபர் ட்ரம்ப்!! அமெரிக்காவில் வெடித்த உள்நாட்டு பிரச்சனைகள்!! 

The president who is stirring up India

இந்தியாவை நேரடியாக மற்றும் மறைமுகமாக  சில காலமாக விமர்சித்து வந்தார் டிரம்ப். இந்தியாவை வம்பு இழுத்த அமெரிக்கா சொந்த நாட்டிலேயே பெரிய பிரச்சனைகள் தற்போது  ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா அதிபர் இந்தியாவில் அத்துமீறி அரசியல் மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் தொடர்ந்து செயல்பட்டது கேள்விக்கு ஆளானது. அண்மையில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக்கிற்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்தார். இந்தியாவின் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டாம் என்று அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.

ட்ரம்பின் எச்சரிக்கையின் படி, நீங்கள் என் ப்ரண்ட் , நீங்கள் பல பில்லியன் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்கிறீர்கள். ஆனால், இப்பொழுது கட்டிடம் கட்டுவதாக கேள்விப்பட்டேன். இந்தியாவில் கட்டிடம் கட்டுவது நான் விரும்பவில்லை. இந்தியாவை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் இந்தியாவில் கட்டிடம் கட்டலாம்.

ஆனால், நீங்கள் அமெரிக்க நிறுவனம். இந்தியாவில் கட்டிடம் கட்டக் கூடாது. ஏனெனில், இந்தியா உலகத்திலேயே அதிக வரி விதிக்கும் நாடு. அதனால், உங்கள் பொருட்களை விற்பனை செய்வது கடினம் என்று எச்சரித்துள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் போரில் நான் தலையிட்டதால்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது. ஒப்பந்தம் செய்வோம், வர்த்தகம் செய்வோம் என்று அழைப்பு விடுத்ததால் தாக்குதலை நிறுத்தி விட்டார்கள். இவ்வாறு இந்தியாவை சீண்டிக் கொண்டிருந்த அமெரிக்காவுக்கு தற்போது உள்நாட்டிலேயே பூகம்பம் கிளம்பியுள்ளது.

முதலாவது அதிபர் ட்ரம்ப் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கும் இடையிலான மோதல். இதன் விளைவாக எலான் புதிய கட்சி ஒன்றிய தொடங்குவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இரண்டாவது, குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்கள் மிகப்பெரிய போராக வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி, கலிபோர்னியா மாகாணம் மற்றும் அதன் மேயருக்கும், அதிபருக்கும் இடையேயான மோதல் வெடித்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் ஆவணங்கள் இல்லாத குடியேறியவர்களை விசாரித்து வருகிறது. இதில் அதிர்ச்சி அடைந்த மக்கள் கலிபோர்னியாவின் முக்கிய இடங்கள் கூடி அமைதியை தொடங்கி போராட்டம் வன்முறையாக வெடித்தது.

லாஸ் ஏஞ்சல்ஸ், காம்ப்டன் மற்றும் பாரமவுண்ட் போன்ற நகரங்களில் மையங்களில் ஆர்ப்பாட்டம்  பரவியது. இதில் சாலைகளை மறிப்பது, வாகனங்களை எரிப்பது, கற்கள் மற்றும் பாட்டில்களை வீசுவது போன்ற வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram