சென்னை: சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை நிலவரம், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் (மே 20 ஆம் தேதி) கிராமுக்கு ரூ.45 அதிகரித்து காணப்பட்டது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 8 ஆயிரத்து 710 க்கு விற்பனையானது. மேலும் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 69 ஆயிரத்து 680 என்பது விற்பனை செய்யப்பட்டது.
நேற்று (21ஆம் தேதி) ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. அதன்படி, தங்கம் ஒரு கிராம் ரூ.220 அதிகரித்து காணப்பட்ட நிலையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ 1760 உயர்ந்து விற்பனையானது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 8,930-க்கும், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.71, 440 க்கும் விற்பனையானது. அதன் வரிசையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்து காணப்படுகிறது.
இன்று சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,800 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ 45 உயர்ந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ஆனது ரூ.8,975 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச நிலவரங்கள் காரணங்களால் இந்தியாவில் மே மாத துவக்கத்திலிருந்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதேபோல் இன்று (மே 22) வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1 அதிகரித்து காணப்படுகிறது. இதன் படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.112 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,12,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (மே 21) ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 111 க்கு விற்பனையானது மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ ஒரு லட்சத்து 1,11,000 க்கும் விற்பனையானது. ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் அதாவது ரூ 72 ஆயிரத்து நெருங்கியதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.