தற்பொழுது உள்ள தங்கத்தின் விலை உயர்வு மற்றும் எதிர்காலத்தில் தங்கத்தின் விலை உயர்வு எப்படி இருக்கும் என்பது குறித்த சில முக்கிய தகவல்களை தன்னுடைய வீடியோவில் பகிர்ந்திருக்கிறார் பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள்.
ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் பகிர்ந்து இருக்கக்கூடியவை :-
அமெரிக்காவை மிகப்பெரிய பொருளாதார நாடாக உயர்த்துவேன் என தேர்தல் வாக்குறுதி அளித்த அதிபற்றம் அவர்கள் அதற்கு மாறாக தற்பொழுது அமெரிக்காவின் பொருளாதாரத்தை அந்த நிலைக்கு எடுத்த செல்வதாகவும் இதனால் உலக அளவில் தங்கத்தின் விலை மட்டுமல்லாது பங்குச்சந்தைகளின் விளையும் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே செல்வதாக தெரிவித்து இருக்கிறார்.
தங்க பத்திரத்தில் முதலீடு செய்தவர்கள் இப்பொழுது பெரும் லாபத்தை ஈட்டி வருவதாகவும் 2000 ரூபாய்க்கு தங்க பத்திரத்தில் முதலீடு செய்தவர்கள் தற்பொழுது 193 சதவிகித லாபத்தை ஈட்டி இருப்பதாகவும் சுட்டிக்காட்டி இருக்கிறார். தங்கம் வாங்குவது என்பது இனிவரும் காலங்களில் மிகச்சவாலான விஷயம் என்றும் தங்கத்தோடு கூடவே வெள்ளியின் விலையும் உயரும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 9000 ரூபாய் வரையும் 24 கேரட் தங்கம் ஒரு கிராமிற்கு 10000 ரூபாய் வரையும் செல்வதற்கான வழிவகைகள் இருப்பதாகவும் ஆனால் இது 12 மாதங்களில் நடைபெறுமா? அல்லது 24 மாதங்களில் நடைபெறுமா ? என்பது மட்டுமே தற்பொழுது கேள்விக்குறியாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.