திருப்பூர்: பொதுவாக ஆசிரியர்கள் என்றால் மாணவர்களுக்கு பயமும் மரியாதையும் அனைத்தும் இருக்கும் ஆனால் தற்போது நிலை வரும் சூழ்நிலையில் பெண்கள் ஆசிரியர்களிடம் பேசவும் பழகவும் மிகவும் பயப்படுகிறார்கள். அதற்குக் காரணம் தற்போது நாம் கேள்விப்பட்டு வரும் ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக நடந்து கொள்வது தான். இது போன்ற செயல்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இதைப் போலவே இங்கு ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.
நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த அந்த முதியவரின் பெயர் ஆரோக்கியசாமி அவர் ஒரு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் என்பதும் தெரிய வந்துள்ளது ஏழ்மை சூழலில் இருந்த அந்த இளம் பெண் ஆரோக்கியசாமி இடம் 15,000 கடன் கேட்டதாக கூறப்படுகிறது இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு வீட்டுக்கு வந்த ஆரோக்கியசாமி அந்த இளம் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீற ஆரம்பித்திருக்கிறார். கோபமான இளம் பெண் அவரிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வீட்டுக்குள் வந்ததும் முன்னெச்சரிக்கையாக செல்போனில் உள்ள வீடியோ கேமராவை ஆன் செய்து தனது வீட்டில் வைத்துள்ளார்.
ஏற்கனவே அந்த இளம் பெண்ணிடம் அத்துமீறி தவறாக நடக்க முயற்சித்த ஆரோக்கியசாமி மீண்டும் வீட்டுக்குள் நுழைந்து ஆத்து மீறி உள்ளார். இந்த நிலையில் தான் இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தஞ்சாவூர் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த இளம் பெண் மேலும் இந்த இளம் பெண்ணிடம் மட்டுமல்லாமல் வட்டிக்கு கடன் கேட்கும் பல இனம் பெண்களிடம் இப்படித்தான் ஆபாசமாக பேசுவது படுக்கைக்கு அழைப்பது என எல்லை மீறி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும், இதுகுறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.