TVK: தவெக இரண்டாம் ஆண்டு மாநாடு நடந்து கொண்டு இருக்கும் நிலையில் அங்கு பத்திரிகையாளர்கள் கூட்டம் திரண்டுள்ளது. அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் அங்கு நடக்கும் விஷயங்களை தெரிந்து, அப்டேட் செய்து வருமாறு டார்கெட் வைக்கப்பட்டுள்ளது. அவர்களும் போட்டியோடு துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். பத்திரிகைகளுக்கு இடையில் போட்டியும் நிலவுவதால் ஏதேனும் ஒரு புதிய நியூஸ் கிடைக்காதா? என்று தொடர்ந்து போட்டியோடு பத்திரிக்கையாளர்கள் ட்ரை செய்து வருகின்றனர்.
தவெக மாநாட்டில் கட்சி உள்கட்டமைப்பு குறித்தும், கட்சி முன்னேற்றம் குறித்தும் ஆலோசனை நடக்கப்பட உள்ளதால் அது மிகவும் ரகசியமாக இருக்க வேண்டும் என்று கட்சி குழு முடிவு செய்துள்ளது. கட்சித் தொண்டர்களுக்கு மொபைல் போனை கூட சுவிட்ச் ஆப் செய்து தான் உள்ளே வரவேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்தது.
மேலும், கட்சி சம்பந்தப்பட்ட ரகசிய விஷயங்கள் வெளியே வராமல் இருக்க பிரத்யேகமாக அங்கு நிறைய செக்யூரிட்டிகள் மற்றும் பவுன்சர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கு உள்ளே யாரையும் அனுமதிக்க கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இதனால் அங்கு நியூஸ் கலெக்ட் செய்யப்பட முடியாததனால் அங்கு பவுன்சர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் சோர்வோடு அங்கு உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.
பத்திரிகை நிறுவனம் மற்றும் பவுன்சர்களுக்கு இடையே பத்திரிக்கையாளர்களின் டார்கெட் மாட்டிக்கொண்டு தவிக்கிறது. பத்திரிகையாளர்களும் மக்களுக்கு உரிய தகவலை அளிக்க வேண்டும் என்ற முனைப்போடு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.