பாகிஸ்தான் தோல்விக்கு காரணம் அட்டவணை தான்!! எங்களுக்கு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயமா??

The reason for Pakistan's defeat is the schedule

Cricket: பாகிஸ்தான அணி தோல்வியடைந்து வெளியேற முக்கிய காரணம் ஐசிசி தான். இந்தியாவுக்கு ஈசியாக அட்டவணை அமைக்கப்பட்டது.

இந்த வருடம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதனை பாகிஸ்தான் அணி நிர்வாகம் இந்த முறை நடத்துகிறது. எனினும் பாகிஸ்தான் முதலாவதாக வெளியேறியது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் பல வகையான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் ரமீஸ் ராஜா சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான அணி முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் பேட்டிங் பந்துவீச்சு பில்டிங் என அனைத்து விதத்திலும் சொதப்பியது, 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானின் தோல்வியை தழுவியது. இது குறித்து கருத்து தெரிவித்தவர் பாகிஸ்தான அணி எப்படி முதல் போட்டியிலேயே நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும்படி அட்டவணை அமைக்கப்பட்டது. பாகிஸ்தானை அணி முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை தான் எதிர்கொண்டு இருக்க வேண்டும். ஆனால் நியூசிலாந்து அணி எதிர்கொண்டது.

பங்களாதேஷ் அணி தற்போது நன்றாக விளையாடி வந்தாலும் அந்த அணியுடன் தான் பாகிஸ்தான் அணி முதலில் மொதியிருக்க வேண்டும். அப்போது அவ்வளவு கடினமான சூலில் பாகிஸ்தான் அணி இருந்திருக்காது. இதனால் அட்டவணை அமைத்ததில் தவறு. இந்திய அணி எளிதாக முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டு எளிதாக வெற்றியை அடைந்தது என சர்ச்சை கருத்தை கூறியுள்ளார். இந்த கருத்துக்கு பலரும் எதிர்த்தரப்பு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram