Cricket : பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் வந்தவுடன் அவர் செய்த விஷயங்கள் நியாயமே இல்லை என முன்னாள் வீரர் குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது இதனை பாகிஸ்தான் அணி நிர்வாகம் தான் நடத்தி வருகிறது. இந்தத் தொடரில் முதலாவதாக பாகிஸ்தான் அணி வெளியேறியது பாகிஸ்தான் ரசிகர்களுடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாகிஸ்தான் அணி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தான் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது இந்த போட்டியில் தோல்வி அடைந்தது இரண்டாவது இந்திய அணியுடன் மோதியது இந்தப் போட்டியிலும் தோல்வியை தழுவிய காரணத்தால் அரேதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது பாகிஸ்தான் அணி. இதனால் பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர்கள் ரசிகர்கள் பல்வேறு வகையான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அகமது ஷேஷாத் வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார். அதில் அவர் கூறுகையில் பாபர் அசாம் தொடக்கத்தில் அணியில் இணைந்து விளையாடிய போது அவர் பாகிஸ்தான் அணிக்காக பல்வேறு வகையான சாதனைகள் குவிப்பார் என பெரும் எதிர்பார்ப்புடன் அணியில் நுழைந்தார். அதன் பிறகு அவர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெருமளவில் காணப்பட்டது. ஆனால் அதன்பிறகு அவர் எவ்வளவு தடுமாறுகிறார் என்பதை அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
அவர் கேப்டனாக பொறுப்பேற்ற பின்பு அணியில் திறமையான வீரர்கள் நீக்கிவிட்டு தனது நண்பர்களையே சுற்றி வைத்துக் கொண்டார். இதுவே இந்த வகையான தோல்விக்கு காரணம். நண்பர்களுக்காக கிரிக்கெட்டை பார்த்தால் ஒட்டுமொத்த கிரிக்கட்டும் பாதித்து தோல்வியில்தான் முடியும். இதனால் நன்றாக விளையாடும் சிறந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுகிறது, அது மட்டுமல்லாமல் அரசியல் தலையீடு என்பது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் எப்போதும் இருக்கும். எனவே பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் அதை சரி செய்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என அவர் கூறியுள்ளார்.





