2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் நடிகர்.விஜய் அவர்களால் தொடங்கப்பட்டது. தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது. தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி உள்ள வி.சாலை என்ற இடத்தில் அக்டோபர் 27,2024 ஆம் ஆண்டு நடைபெற்றது. திரைத்துறையை ஒதுக்கித் தள்ளிவிட்டு முழு நேரம் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார் நடிகர் விஜய். கட்சி தொடங்கிய நாள் முதல் சிக்கல்களுக்கு மேல் சிக்கல்களை சந்தித்து வருகிறார். தற்போது முக்கோண வடிவில் அவருக்கு பிரச்சனை கிளம்பியிருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் மூன்று பேரின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதால் விஜயை அணுக முடியாமல் மற்ற நிர்வாகிகள் வாயடைத்து நிற்கின்றனர்.
கட்சியின் முக்கிய புள்ளிகளான புஸ்ஸி ஆனந்த்,ஜான்,ஜெகதீஷ் ஆகியோர் தங்களை தாண்டி கட்சியில் யாரும் வளர்ந்து விடக்கூடாது என்று உள்ளவர்கள். மேலும் தங்களைத் தவிர வேறு நிர்வாகிகள் விஜயிடம் நல்ல பேரை வாங்கி விடக்கூடாது என்றும் உள்ளனர். புஸ்ஸி ஆனந்த் தவெக கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கிறார். ஜான் ஆரோக்கியசாமி விஜயின் அரசியல் ஆலோசகர் பதவி வகித்துள்ளார். மேலும் விஜய்யின் மேனேஜர் மற்றும் கட்சியின் பொறுப்பாளருமான ஜெகதீஷ் பழனிச்சாமி போன்றவர்கள் விஜய் மூளை சலவை செய்கிறார்கள். தற்போதைய கட்சியின் கஜானாவாக இருக்கும் பொருளாளர் வெங்கட்ராமனை குறிவைத்து காலி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிராமணராக இருக்கும் வெங்கட்ராமனை ஆர்எஸ்எஸ் பாஜக ஆகியோரின் கைக்கூலி என்றும் விஜய்யிடம் அவர்கள் போட்டுக் கொடுத்துள்ளனர். மேலும் வெங்கட்ராமனை அந்தப் பதவியில் இருந்து மாற்றி புஸ்ஸி ஆனந்த்,ஜெகதீஷ்,ஜான் ஆகியோர்களுக்கு விசுவாசமாக இருக்கும் தொழிலதிபரை நிர்ணயிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்து இருக்கிறது. கட்சியின் ஆலோசராக உள்ள ஜான் ஆரோக்கியசாமி மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர்களுக்கு இடையே பகை சூழ்ந்துள்ள நிலை உள்ளது. இதில் நீ பெரிய ஆளா?இல்லை,நான் பெரிய ஆளா? என்று போட்டி கமுக்கமாக இருக்கிறது. விஜயின் கடைசி திரைப்படம் ஜனநாயகன் படப்பிடிப்பு தற்போது 95% முடிந்துவிட்ட நிலையில் இருக்கிறது.
பகுத்தறிவு பகலவன் பெரியாரின் கொள்கைகளை அறிவித்துவிட்டு ஜோசியர் குறித்த நாளில் பொதுக் கூட்டத்தை நடத்துவது கட்சி நிர்வாகிகள் விரும்பவில்லை என்று தவெக கட்சி தரப்பினர் முணுமுணுத்து வருகின்றனர். ஜூலை 2 வது வாரத்தில் கட்சியின் இரண்டாவது மாநாட்டை நடத்த விஜய் திட்டமிட்ட உள்ளார் என்றும் கட்சித் தரப்பில் கசிந்து வருகிறது. 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடத்த திட்டமிட்டுள்ளார் விஜய். கடலூரில் வடக்கு மண்டலம் பூத் கமிட்டி கூட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளார். இதற்கான தேதி நேரம் ஆகியவற்றை ஜோதிடரின் ஆலோசனை கேட்டு அதன் படி செயல்களை மேற்கொள்கிறார்.
என்றும் நிர்வாகிகள் இடையில் சலசலப்பு நிலவுகிறது. பிரசாந்த் கிஷோர் மற்றும் அவரது அபூர்வா பணியாளர்கள் TVK கட்சிக்காக எடுக்கப்பட்டது. சிம்பிள் சென்ஸ் என்ற நிறுவனம் மூலம் எடுக்கப்பட்ட ஐபேக் ஊழியர்களை ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆப் காமன் வழங்குவதாக இருந்தது. ஆனால் ஆதவ் அர்ஜுனா வுக்கு எதிராக பிரசாந்த் கிஷோர் போட்டுக் கொடுத்துவிட்டு தாங்கிக்கொள்ள முடியாமல் அப்பாவி இளைஞர்கள் 34 பேரை ஒரே இரவில் வேலையை விட்டு அனுப்பி இருக்கிறார். மேலும் நீக்கப்பட்ட 34 இளைஞர்களும் விஜயின் வீட்டை முற்றுகை இடுவதற்கான திட்டத்தையும் தீட்டி வருகின்றனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.