தஞ்சாவூர்: தஞ்சாவூர் அடுத்த மாத கோட்டை ரோஸ்லின் நகரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் பேட்டரி கடை நடத்தி வருகிறார். சீனிவாசனின் மனைவி மணிமேகலை. இவர்களுக்கு ஸ்ரீராம் என்ற மகன் உள்ளார். தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகிறார். இவரது பள்ளியில் வகுப்பு ஆசிரியர் மற்றும் கணினி அறிவியல் ஆசிரியராக இருப்பவர் சிம்காஸ். சிம்காஸ் ஸ்ரீராம சக மாணவர்கள் முன்பு தன்னை திட்டி அவமானம் படுத்தியதால் மன அழுத்தத்தில் இந்த முடிவை எடுத்துள்ளார்.
நேற்று காலை வீட்டில் அறையிலிருந்து நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை திறந்து உள்ளே சென்றனர். மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெற்றோர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடலை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஸ்ரீராமின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக பெற்றவரிடம் கூறியுள்ளன.
மேலும், ஸ்ரீராம் தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதம் எழுதி வைத்திருந்தது தெரிய வந்தது. அதில் என் வகுப்பில் படிக்கும் சக தோழி இடம் நட்பாக பேசுவது வகுப்பு ஆசிரியர் தவறாக புரிந்து கொண்டு சக மாணவர்கள் முன்பு தகாத வார்த்தைகளால் திட்டினார். மன உளைச்சலுக்கு ஆளான நாள் தற்கொலை முடிவுக்கு வந்து விட்டேன்.

என் தற்கொலை முடிவுக்கு வகுப்பாசிரியர் சிம்காஸ் மட்டும் தான் காரணம் என கூறப்பட்டிருந்தது. ஸ்ரீராமின் உடலை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. வகுப்பு ஆசிரியர் தான் காரணம் என்று என்பதை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் இறங்கினர்.
போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஸ்ரீராமின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரை கைது செய்த பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.