கிருஷ்ணகிரி:தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் ஒரு சில இடங்களில் இன்னமும் குழந்தை திருமணம் என்பது நடைபெற்று தான் கொண்டு வருகிறது இதனை முழுமையாக தவிர்க்க முடியவில்லை. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தர்மபுரி சேலம் கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் இன்னும் இந்த குழந்தை திருமணம் என்பது நடைபெற்று வருகிறது.
இந்த மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் வாழும் மலை கிராமங்களில் வாழும் எளிய மக்கள் சிறுவயதிலேயே வயது அதிகமான ஆண்களுக்கு சிறுமையை திருமணம் செய்து கொடுப்பது என்பது வழக்கமான ஒன்றாக வைத்துள்ளனர் இதை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் இன்னும் நடைபெற்று வருகிறது. இது போன்று சிறு வயதில் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதால் அந்த சிறுமி கருவுறுவதால் குழந்தைகள் உடல் பாதிப்புகள் உடன் பிறக்கின்றன இதனால் கருச்சிதைவு ஏற்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள அஞ்செட்டி தாலுகாவின் கீழ் வரும் கிராமத்து சேர்ந்த ஒரு சிறுமி அந்த சிறுமிக்கு 14 வயது ஆகிறது, அந்த சிறுமிக்கு காளி குட்டை மழை என்ற கிராமத்தை சேர்ந்த மாதேஷ் என்ற கூலி தொழிலாளிக்கு 3 ம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளனர். அந்த கூலி தொழிலாளி மாதேஷ்க்கு வயது 30. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் கூலித்தொழிலாளி மாதேசுக்கு 30 வயது சிறுமியின் தாயார் நாகம்மாவுக்கு 29 வயத. இந்தத் திருமணம் முடிந்த பின்பு பெங்களூரில் திருமணம் செய்துவிட்டு நேற்று வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது அந்த சிறுமி கணவருடன் செல்ல மறுத்து வேறு ஒரு கிராமமான தனது பாட்டி வீட்டிற்கு சென்று விட்டாராம் அதன்பின் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கூலித்தொழிலாளி அதாவது மாப்பிள்ளை மாதேஷ் மற்றும் இவரின் அண்ணன் மல்லேஷ் இருவரும் அந்த கிராமத்திற்குச் சென்று பாட்டியின் வீட்டில் நுழைந்து அந்த சிறுமியை குண்டு கட்டாக தூக்கிச் சென்றுள்ளனர். அதனை அந்த கிராமத்திலிருந்து ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து மீடியாவில் பதிவிட்டுள்ளார். அதன்பின் இதனை போலீசார் அறிந்து திருமணம் செய்த மாதேஷ் அவரது அண்ணன் மல்லேஷ் மற்றும் சிறுமியின் தாயார் ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர்.