கணவன் இறப்பில் நாடகமாடிய மனைவி!! போலிசாரிடம் சிக்கிய காரணம் என்ன??

 

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நாட்றம்பள்ளி, நாயனசெருவு பகுதியில் கடந்த மார்ச் மாதம் நடந்த கொடூரக் கொலை சம்பவம் தற்போது முழுமையாக வெளிவந்துள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த விஜயன் (29) கூலி தொழிலாளி. அவருக்கு வெண்ணிலா (25) என்ற மனைவி மற்றும் இரண்டு வயது பெண் குழந்தை உள்ளனர். கடந்த மார்ச் 17ஆம் தேதி இரவு விஜயன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மரணமடைந்ததாக வெண்ணிலா உறவினர்களுக்கு தெரிவித்தார்.

தூக்கத்தில் இயற்கையாக இறந்ததாக கூறப்பட்ட விஜயனின் சாவை உறவினர்கள் சந்தேகித்ததால், திம்மாம்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. உடலை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு வந்த பரிசோதனை அறிக்கையில், விஜயன் கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சுத் திணறி கொலை செய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

வெண்ணிலாவின் கைப்பேசி பதிவுகளை ஆய்வு செய்த போது, சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் சஞ்சய் (20) என்பவருடன் அவளுக்கு இரகசிய காதல் தொடர்பு இருந்தது தெரியவந்தது. விஜயன் அதை அறிந்து மனைவியை கண்டித்ததாகவும் தெரிய வந்தது.

இதனால் கோபமடைந்த வெண்ணிலா, தனது காதலன் சஞ்சயுடன் இணைந்து கணவனை கொல்லத் திட்டமிட்டார். சஞ்சய் தனது நண்பர்கள் சக்திவேல் (23), நந்தகுமார் (19), அழகிரி (19), சபரிவாசன் (19) மற்றும் 17 வயது சிறுவனை ஏற்பாடு செய்து கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த மார்ச் 17ஆம் தேதி இரவு இந்த ஐந்து பேரும் விஜயன் வீட்டுக்கு சென்றனர். கதவை வெண்ணிலா திறந்து அவர்களை உள்ளே அழைத்து சென்றார். விஜயன் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், அவருடைய கை, கால்களை பிடித்து கழுத்தை நெரித்து, தலையணையால் முகத்தை அழுத்தி கொன்றனர். கொலை செய்த பிறகு ஐந்து பேரும் தப்பி ஓடினர். மறுநாள் காலை வெண்ணிலா உறவினர்களிடம் கணவர் தூக்கத்தில் இறந்ததாக நாடகம் ஆடினார். ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. தற்போது வெண்ணிலா, சஞ்சய் மற்றும் இவர்களுடன் சம்பந்தப்பட்ட சிறுவன் உட்பட ஆறு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து கூடுதல் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram