கர்நாடக மாநிலம் தர்வாடி அருகே அமைந்துள்ள அமினபாவி கிராமத்தில் ஈரப்பா மற்றும் கமலா என திருமணமான தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். தங்களது குடும்ப வாழ்க்கையை ஆரம்பத்தில் அமைதியாக நடத்தி வந்தனர். ஆனால் நாள்கள் செல்லச் செல்ல ஈரப்பா தன்னை மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கிக் கொண்டார். ஈரப்பா வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருக்கத் தொடங்கினார். குடும்ப செலவுகளை கையாள வேண்டிய கட்டாயத்தில், அவரது மனைவி கமலா அருகிலுள்ள ஓட்டலில் வேலை செய்ய முடிவு செய்து வேலைக்குச் சென்றார். இவ்வேலையின் மூலமாக கமலா, சபாப்பா எனும் இளைஞரை சந்தித்து பழகினார். இந்த நட்பு நிலை நெருக்கமாகி, இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கள்ளக்காதலில் இருந்துள்ளனர். இந்நிலையில், தனது கணவனான ஈரப்பா மீது வன்மம் கொண்ட கமலா, தனது காதலனான சபாப்பாவிடம் “என் கணவனை கொலை செய்து விடு” என கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் தயங்கிய சபாப்பா, பின்னர் கமலாவின் அழுத்தத்தால் இறுதியில் அந்த கொடூரத் திட்டத்தில் ஈடுபட முடிவெடுத்தார். தனது நண்பருடன் இணைந்து, ஈரப்பாவை டாஸ்மாக் மதுக்கடைக்கு அழைத்து சென்று மது அறிந்த வைத்துள்ளார். அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் பெலகா பகுதியில் உள்ள பாலத்திற்கு அருகே அவரை அழைத்துச் சென்றனர். அங்கு கட்டைகள் மற்றும் கற்கள் கொண்டு ஈரப்பாவை சித்திரவதை செய்து கொலை செய்தனர். இக்கொடூரச் சம்பவம் அடுத்த நாள் காலை தெரியவந்த போது, அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் வழங்கினர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட அவர்கள், தலைமறைவாக இருந்த கமலாவை கைது செய்தனர். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் சபாப்பா மற்றும் அவரது நண்பரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.