வேளாங்கண்ணி: கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனா என்ற ஆண் அதே பகுதியைச் சேர்ந்த எலன் மேரி பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி வேளாங்கண்ணிக்குச் சென்று இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். மேலும் அங்கிருந்த தங்கும் விடுதியில் வசித்து வந்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணின் நண்பர்களுடன் சேர்ந்து செய்த செயல் அனைவரையும் ஆடி போக வைத்துள்ளது.
பெங்களூர் சேர்ந்த எலன் மேரி என்ற பெண் அதே பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனா என்பவரை காதலித்து வந்துள்ளார். பெண்ணுக்கு 21 வயதும் ஆணுக்கு 22 வயது ஆகிறது. மேலும் அவர்கள் வேளாங்கண்ணிக்கு சென்று திருமணம் முடித்து அங்கேயே இருந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து ஜனார்த்தனன் நண்பர்கள் இரண்டு பேர் கர்நாடக மாநிலத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சென்று அவர்கள் தங்கி இருந்த அறைக்கு பக்கத்திலே தங்கி இருந்தனர். மேலும் 8 தேதி வேளாங்கண்ணி ரயில் நிலையத்தின் அருகே ஜனார்த்தனா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார்
. இதற்கிடையில் ஜனார்த்தனா எலன் மேரி ஆகியோருடன் தங்கி இருந்த இரண்டு பேர் வேளாங்கண்ணி ரயில் நிலையதில் இருந்து தஞ்சை நோக்கி செல்ல இருந்தனர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் விசாரணை செய்த போது இவர்கள் கர்நாடக மாநிலம் சிவமொக்கா பகுதியச் சேர்ந்த 15 வயது சிறுவன் மற்றும் 19 வயதான ஜீவன் என்பவர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவர்களிடத்தில் விசாரணை செய்தபோது. அந்த கொலையை செய்ய தூண்டியாதே ஜனார்த்தனை காதலித்து திருமணம் செய்து அவரது மனைவிதான் என்று தகவல் வெளிவந்தது. ஏழு விசாரணை தேடி வந்த விவரங்கள் அந்தப் பெண் அவரை தீட்டு கட்ட தான் வேளாங்கண்ணி கூட்டி வரப்பட்டார் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த பெண்ணிற்கு ஏற்கனவே முதல் திருமணம் தமிழ்நாட்டில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது.
இன்று அவருடன் வாழ விருப்பம் இல்லாத காரணத்தினால் பெங்களூருவில் வசித்து வந்தார். அங்கு தான் ஜனார்த்தன் பழக்கமாய் காதலித்து வந்துள்ளனர். மேலும் ஜனார்த்தனையும் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் அவருடைய நண்பன் ஜீவனை மூன்றாவதாக காதலித்து வந்துள்ளார்.இவர்களுக்கிடையில் ஜனார்த்தனன் தடையாக இருப்பதன் காரணத்தினால் அவரை தீர்த்து கட்ட எலன் மேரி முடிவு செய்துள்ளார். மேலும் இந்த கொலை தொடர்பாக மூன்று பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.