உத்திரபிரதேசம்: உத்திரபிரதேசத்தில் திருமணம் ஆகிய முதலிரவில் மனைவியை கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை.
உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தி என்ற நகரில் உள்ள பகுதி தான் காண்ட் இங்குள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பிரதீப் இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சிவானி என்ற பெண்ணுடன் திருமணம் பேசி முடித்துள்ளனர். இவர்களுக்கு சனிக்கிழமை அன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணம் முடிந்த கையோடு அன்று இரவு அவர்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இருவரும் முதலிரவுக்காக அறைக்குள் சென்றுள்ளனர் மறுநாள் காலை புது திருமண தம்பதியினர் வெளியில் வராமல் இருந்துள்ளனர். நீண்ட நேரமாக எதிர்பார்க்கும் வெளியே வராத நிலையில் உறவினர் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் ரூமின் கதவை தட்டி உள்ளனர். இருவருமே கதவை திறக்கவில்லை உள்ளிருந்து எந்த சத்தமும் வரவில்லை. அதன்பின் வீட்டில் உள்ளவர்கள் பயந்து கதவினை உடைத்துக் கொண்டே உள்ளே சென்று பார்த்தபோது உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
மணப்பெண் படுக்கையில் சடனமாக கிடந்துள்ளார் மற்றும் மணமகன் ஃபேமிலி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார் இதை கண்டு அலறிய குடும்பத்தினர் போலீசுக்கு தகவல் கூறியுள்ளனர். உடனே விரைந்து வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி மருத்துவமனை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதலிரவு அன்று அறையில் கணவன் மனைவியின் கழுத்தை நிறுத்திக் கொன்றதாகவும் அதன் பின் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதற்கு காரணம் என்ன என்பது பற்றி எந்த தகவலும் இல்லை இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.