அறுபடை வீடுகளில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கோயிலின் கும்பாபிஷேகம் குறித்த முடிவுகளுக்கு பக்த கோடி பெருமக்கள் ஆர்வமாக காத்திருந்தனர். இந்த கோயிலில் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி பாலாலய விழா நடைபெற்று தொடர்ந்து அங்கு கோயில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மூல கோபுரத்தின் விமானங்கள் ஆகம முறைப்படி பூஜையிட்டு அவை தனியே கீழே கழற்றப்பட்டு உள்ளன. கும்பாபிஷேகம் முன் அவை மீண்டும் பொருத்தப்பட்டு கோபுர விமானங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இதன் கும்பாபிஷேகம் குறித்து வழக்கு இருந்த நிலையில் அது தற்சமயம் முடிவுக்கு வந்துள்ளது. எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்து இருந்த இப்புனித தளத்தின் குடமுழக்கு விழாவானது, வருகின்ற ஜூலை மாதம் ஏழாம் தேதி கோலாகலமாக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அங்கு கோயில் பணிகளில் ஈடுபட்டவர்கள் வெகு வேகமாக பணிகளை செய்ய துரியமாகியுள்ளனர்.
ஜூலை ஏழாம் தேதி காலை 6:15 மணியிலிருந்து 6:50 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. பலரும் இந்த தகவலை அரோகரா என்ற கோஷத்தை பதிவிட்டு ஷேர் செய்து வருகின்றனர்.