சினிமா: முன்னணி நடிகர்கள் ஒருவரான கார்த்திக் அடுத்து நடக்க இருக்கும் படத்தில் அதிக பொருட்செலவில் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்கள் ஒருவர் கார்த்தி இவருக்கு என்ன தனி பாணியில் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள நடிகர் இவர். இவர் கடைசியாக நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு வெளிவந்த திரைப்படங்கள் எதுவும் அவ்வளவாக அவருக்கு கை கொடுக்கவில்லை. அதன்பின் வெளியான திரைப்படம் ஜப்பான் பெரும் இடியாக அவருக்கு விழுந்தது. எதிர்மறையான விமர்சனங்கள் பெற்று ஜப்பான் திரைப்படம் தோல்வியடைந்தது. அதன்பின் மெய்யழகன் திரைப்படம் வெளியானது ஓரளவு வரவேற்பு பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் இந்த திரைப்படமும் பெரிதாக எடுபடவில்லை. அதனால் தற்போது கார்த்தி அடுத்து வெளியே உள்ள திரைப்படத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சர்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பனை பெற்று வசூலை குவித்தது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது கார்த்தி நடித்து வருகிறார். சர்தார் திரைப்படத்தின் மொத்த தயாரிப்பு செலவு 30 கோடி, ஆனால் சர்தார் 2 திரைப்படத்தின் பட்ஜெட் 100 கோடி எனக்கு கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் அதிகபட்ச காட்சிகள் சீனாவில் வைத்து திரைப்படமாக்கப்பட்ட வருகிறது. இந்த சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து முடித்தபின் கார்த்தி கைதி 2 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களும் இவருக்கு வெற்றியை கொடுக்குமா??