சென்னை: நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்று கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ளார். கூட்டத்தொடரில் பங்கேற்று பின் சென்னை திரும்பி உள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன். விமான நிலையத்தில் செய்தியாளர்களின் சந்திப்பின் போது பேசிய அவர், ஆணவக் கொலைகளுக்கு கட்சிகள் காரணம் அல்ல.
குறிப்பாக சமூக அமைப்புதான் என்று பேசினார். மேலும், அவர் பேசுகையில், வெளியில் இருந்து பார்த்த இடத்தை தற்போது நான் உள்ளிருந்து பார்க்கிறேன். உள்ளிருந்து பார்க்கும் போது தான் கடமை பெரும் மற்றும் ஆற்ற வேண்டிய கடமைகள் என்னென்ன என்பது பற்றி தெரிகிறது.
முனைப்பு நாடுகளில் முதலில் தமிழ்நாடு தான் நாடாளுமன்றத்தில் எனது முதல் போக்கஸ் இதுதான். நாடாளுமன்றத்தில் உறுப்பினராக பதவியேற்று முக்கியமான பொறுப்பு என்று நினைக்கிறேன். என் கடமையை சரியாக செய்வேன். ஆணவக் கொலைகள் என்பது சுதந்திரம் வாங்குவதற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்து நடந்து கொண்டிருக்கிறது.
ஆணவக் கொலைகள் என்பதற்கு கட்சிகள் காரணம் அல்ல. நம்முடைய சமுதாய அமைப்பு எப்படி உள்ளது. அதற்கு சமுதாய அமைப்பை மாற்ற வேண்டும். கட்சிகள் என்பவை இன்று வரும் நாளை போகும் ஆனால் நாடு நடந்து கொண்டு இருக்கும் என்றவாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.