ஸ்டாண்டர்ட் காமெடியனாக சின்னத்திரையில் தோன்றியவர் நடிகை நிஷா. அதன்பின் தன்னுடைய திறமையாலும் பேச்சாற்றலாலும் இன்று விஜய் டிவியில் சில ஷோக்கலில் ஆன்கர் ஆகவும் பணிபுரிகிறார்.
தொகுப்பாளினியாக இருக்க வேண்டும் என்றால் கலராகவும் அழகாகவும் ஆங்கிலத்தில் நல்ல பேச்சாற்றலும் இருக்க வேண்டும் என்பது போன்ற வரையறை இருந்த நிலையில் அதனை முழுவதுமாக உடைத்தெறிந்தவர் நிஷா என்று கூறினால் மிகையாகாது. சென்னையில் வெள்ள நிவாரண நிதிகள் கொடுப்பதில் மிகவும் மும்முறமாக இறங்கி பலருக்கு பல நன்மைகளை செய்திருக்கிறார்.
தன்னைக் குறித்து ரசிகர்கள் எவ்வளவு விமர்சித்தாலும் அதனை நேர்மறை எண்ணங்களோடு எதிர்கொண்டு இன்று சென்னையில் தனக்கென சொந்த வீடு ஒன்றை வாங்கி தன்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவு பெற்றிருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் தொகுப்பாளினி நிஷா.
சமீபத்தில் நிஷா அவர்கள் தன்னுடைய பட்டத்தை துறப்பதாக அறிவித்திருக்கிறார். சின்னத்துரை நிஷா அவர்களை அனைவரும் அன்போடு சின்னத்திரை நயன்தாரா என அழைத்து வந்தனர். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களே தன்னுடைய லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் தனக்கு வேண்டாம் என்றும் தன்னை நயன்தாரா என்ற பெயரால் அடையாளம் கண்டால் மட்டுமே போதும் என்று குறிப்பிட்டிருப்பது போல தற்பொழுது நிஷா அவர்களும் தன்னை கருப்பு நயந்தாரா என அடையாளப்படுத்த வேண்டாம் என்றும் நிஷா என்று அன்போடு அழைக்கும் படியும் வேண்டி கேட்டுக் கொண்டிருக்கிறார்.