கிரிக்கெட்: இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் மூன்றாவது போட்டியின் முக்கிய வீரர் இவர்தான் இவர்தான் வெற்றி நிர்ணயிக்கப்படும் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் உசைன் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் நாளை மூன்றாவது போட்டி தொடங்க உள்ளது. இரு போட்டிகளிலும் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ளது.
முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது அதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் பந்துவீச்சு. மிகவும் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய வேத பந்துவீச்சாளர்கள் தான் முதல் போட்டியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இரண்டாவது போட்டியில் பும்ரா பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அதற்குக் காரணம் அவருக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தது என விளக்கம் அளிக்கப்பட்டது.
இருந்தாலும் அவர் இடம்பெறவில்லை என்றாலும் இரண்டாவது போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி. மேலும் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் கூறுகையில், நாளை தொடங்க உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு துருப்புச் சீட்டாக பும்ரா இருப்பார். அவரின் முழு திறமையை நாளை தொடங்க உள்ள போட்டியில் காண்பீர்கள் என எச்சரிக்கை செய்துள்ளார் நாசர் உசைன்.