CRICKET: நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் மும்பை இடையிலான போட்டி மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்டது. மேலும் இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி ப்ளே ஆப் செல்லும் என திரில்லாக தொடங்கியது போட்டி.
நடைபெற்று வரும் ipl தொடரில் நேற்று புள்ளி பட்டியலில் 4 வது மற்றும் 5 வது இடத்தில இருந்த டெல்லி மற்றும் மும்பை இரு அணிகளுக்கு இடையே தொடங்கியது இந்த போட்டி மிக முக்கிய போட்டியாக பார்க்கப்பட்டது. அதற்கு காரணம் இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி ப்ளே ஆப் முன்னேறும் தோல்வி அடையும் அணி வீடு திரும்பும். எனவே இந்த போட்டியின் மீது மிகபெரிய எதிர்பார்ப்பு காத்திருந்தது. இந்நிலையில் தொடங்கிய இந்த போட்டியில் முதலில் டெல்லி அணி டாஸ் வென்றது.
டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது டெல்லி அணி. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 180 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. மேலும் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி தொடக்கம் முதல் சொதப்பி வந்த நிலையில் மோசமான நிலையில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்து வெளியேறியது.
இத்தகு முக்கிய காரணமாக பார்க்கபடுவது கே எல் ராகுல் தான் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர் 11 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்தது விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்தது வெளியேறியது டெல்லி அணி. இந்த முறை கோப்பையை வெல்ல போவது யார்??