வெயில் திரைப்படத்தில் பன்றி மேய்க்கக்கூடிய ஒருவரை வில்லனாக காட்டியது குறித்து பொது நிகழ்ச்சியில் இயக்குனர் வசந்த பாலன் அனைவர் முன்னிலையிலும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
தமிழ் திரையுலகில் பா ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றவர்கள் வருகைக்குப் பின்பு சிறுபான்மையினர் தலித் இன மக்கள் போன்றவர்களின் மீதான கண்ணோட்டம் முற்றிலுமாக மாறி இருப்பதாகவும், படங்களும் இவர்களை தீயவர்களாக காட்டுவது மாற்றப்பட்டு தற்பொழுது அவர்களின் உண்மை சூழல் மக்களுக்கு விளங்கும் வண்ணம் படங்கள் வெளி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் நடைபெற்ற பிகே ரோஸி படத்தின் உடைய விழாவில் இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு ஒருங்கிணைப்பு சார்பில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் வசந்த பாலன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வின் கடைசி நாளாக நேற்று நடந்த சிறப்பு விழாவில் சினிமாவின் பார்வை மற்றும் சிறுபான்மையினரின் வாழ்வியல் கருத்துக்கள் இப்பொழுது இருக்கக்கூடிய இயக்குனர்களால் மாற்றப்பட்டு இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னுடைய வெயில் திரைப்படத்தில் பன்றி மேய்க்கக்கூடிய ஒருவரை வில்லனாக காட்டியது குறித்து தற்பொழுது வருத்தப்படுவதாகவும் இனி இது போன்ற தன்னுடைய படங்களை காட்டப் போவதில்லை என்றும் தெரிவித்த இவர், இந்த செயலுக்காக மனம் உருகி மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்திருக்கிறார். எளிமையான நடையில் படங்களை எடுக்கக்கூடிய இயக்குனர் வசந்த பாலன் அவர்கள் இது வரை ஆல்பம், அங்காடித்தெரு, வெயில் போன்ற பல படங்களை எடுத்து தமிழ் திரையுலகில் புதிய கண்ணோட்டத்தை உருவாக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.