1994 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டாமை திரைப்படத்தில் சரத்குமாருக்கு பதிலாக பார்த்திபன் தான் முதலில் தேர்வு செய்யப்பட்டவர் என அவரை நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். பார்த்திபனே இந்த உண்மையை வெளியில் சொல்லும் வரை சரத்குமார் தான்தான் இந்த திரைப்படத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் என நினைத்துக் கொண்டு இருந்தாராம்.
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்,குஷ்பூ, மீனா, மனோரமா, ராஜா ரவீந்தர், கவுண்டமணி, செந்தில், வைஷ்ணவி, பொன்னம்பலம், ராணி போன்றவர்களின் நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் நாட்டாமை. இன்று வரை இந்த திரைப்படம் ரசிகர்களால் பெரிதளவில் போற்றப்படக்கூடிய திரைப்படம் ஆகவே விளங்குகிறது. இப்பொழுது வரக்கூடிய படங்களில் ஒரு சிலவை தான் மீண்டும் மீண்டும் பார்த்தாலும் பார்த்துக் கொண்டே இருக்கணும் என்பது போல எண்ணங்களை தோற்றுவிக்க கூடியவை. அப்படி சலித்து எடுத்தால் ஒன்றோ இரண்டோ கூட தேடுவது கடினம்.
ஆனால் 90களில் வெளியான பல குடும்ப திரைப்படங்கள் 100 முறைக்கு மேல் பார்த்தால் கூட மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் குடும்ப பாங்கான அமைப்பை கொண்ட படங்கள். அப்படித்தான் நாட்டாமை திரைப்படமும், இந்த திரைப்படத்தில் மக்களுக்காக நாட்டாமையும் நாட்டாமைக்காக ஊர் மக்களும் என்பது போன்ற ஒரு ஊரே குடும்பமாக நின்று தங்களுடைய வாழ்வாதாரத்தை முன்னோக்கி செல்வது போல இந்த படம் அமைந்திருக்கும்.
நாட்டாமை திரைப்படம் குறித்து பார்த்திபன் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :-
முதலில் சினிமாவும் தானும் தனி கொடுத்த நம் நடத்தி வருவதாகவும் இன்று வரை சொந்த வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டில் தங்கி வருவதாகவும் தெரிவித்த பார்த்திபன் நான் தங்கி இருக்கக்கூடிய வீட்டின் உரிமையாளர் ஒத்துக்கொண்டால் அந்த வீட்டை விற்று கூட படம் எடுப்பேன் என கிண்டலாக தெரிவித்திருக்கிறார். மேலும் நாட்டாமை திரைப்படம் ஆனது எடுக்க துவங்கும் முன்பு கே எஸ் ரவிக்குமார் அவர்கள் தன்னிடம் தான் வந்து கதை கூறியதாகவும் அப்பொழுது அந்த கதையை கேட்ட தனக்கு சந்தனத்தை பூசிக்கொண்டு கையில் சொம்பை வைத்து நாட்டாமை போல தீர்ப்பு சொல்வது வேடிக்கையாக தோன்றியதாகவும் அதனால் இது எனக்கு செட்டாகாது என மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.