TVK: விஜய் ஏன் அரசியலுக்கு வந்தார் அவர் அவரின் பிடிவாதம் என்ன என்பதை பற்றியும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் எஸ் ஏ சந்திரசேகர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலேயே நம்பர் ஒன் இடத்தை பிடித்தவர் தான் நடிகர் விஜய். அவர் தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை நேற்று முன்தினம் நடத்தினார். முதல் மாநாட்டை போல் இல்லாமல் இருந்தாலும் ஓரளவுக்கு ஒரு சில உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு நன்றாகவே இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை நடத்தி முடித்தார்.
இதனைத் தொடர்ந்து அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார், அதில் அவர் கூறுகையில் முன்னாளில் விஜய் சினிமாவில் நுழைந்த போது சந்திரசேகரின் மகன்தான் விஜய் என்று கூறி வந்தார்கள். ஆனால் தற்போது விஜயின் அப்பா தான் சந்திரசேகர் எனும் அளவிற்கு அவர் என்னை பெருமைப்படுத்தி உள்ளார். இதை நினைக்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக தான் இருக்கிறது. ஒரு இயக்குனராகவும் ஒரு அப்பாவாகவும் நான் அதை நினைத்து பெருமை கொள்கிறேன்.
விஜயகாந்த் வளர்ந்து வரும் போதும் இதை போலத்தான் நான் மிகவும் பெருமையாக உணர்ந்தேன், சினிமா என்பது ஒரு சிறிய வட்டம் தான். அதில் சம்பாதிக்க முடியும் ஆனால் ஒரு சில பேருக்கு தான் முடிந்த உதவிகளை செய்ய முடியும். ஆனால் அரசியல் என்பது அப்படி இல்லை அரசியல் என்பது ஒரு தனது நாட்டின் மீது ஒரு பற்று உள்ள மனிதன் தான் அந்த அரசியல் துறையை தேர்வு செய்ய முடியும். அவர் அரசியல் துறையை தேர்வு செய்து நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.
அரசியல் என்பது ஒரு மிகப்பெரிய கடல் தான் அதில் அவர் நீந்தி வரவேண்டும் என நினைக்கிறார். விஜய் திரைப்படத்தில் பேசுவது போல அவர் முடிவு செய்ததை அவர் மாற்றிக் கொள்ள மாட்டார். அரசியல் களத்தில் குதித்துள்ளார் என்றால் அதில் வெற்றியடையும் வரை அதை அவர் விடவே மாட்டார். சினிமா துறையில் இருந்து கொண்டு சிறிய உதவிகளை செய்வதை விட அரசியல் துறையில் வந்து அனைத்து மக்களுக்கும் நலத்திட்டங்களை செய்ய வேண்டும் என்பதற்காகவே அவர் அரசியலுக்கு வந்துள்ளார். என அந்த பேட்டியில் கூறியுள்ளார் எஸ் ஏ சந்திரசேகர்.