IPL இல் இனிமேல் இந்த விதி இல்லை!! கேப்டன்கள் குஷி.. காத்திருக்கும் பெரிய டுவிஸ்ட்!!

This rule is no longer in IPL

கிரிக்கெட்: நேற்று ஐபிஎல் அணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கேப்டன்கள் இடம்பெற்று மீட்டிங் நடைபெற்றது.

2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடர் வந்து நாளை தொடங்கவுள்ளது. இத் தொடரில் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் இரு அணிகளும் மோத உள்ளன. நேற்று பிசிசிஐ முன்னிலையில் ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள பத்து அணியின் கேப்டன்கள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒரு சில விதிகளை நீக்குவது அல்லது தொடர்பு குறித்து பேச திட்டமிட்டு இந்த கூட்டம் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கடந்த ஆண்டு வரை இருந்த முக்கிய விதியான போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் மெதுவாக பந்து வீசுவதால் அபராதம் மற்றும் தொடர்ந்து அதே போல் மெதுவாக பந்து வீசினால் அணியின் கேப்டனுக்கு தடை விதிப்பது போன்ற விதி இருந்தது. ஆனால் இதற்கு மேல் அந்த விதி மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இனி ஆட்டத்தின் போது பந்துவீச்சாளர் மெதுவாக பந்து வீசினால் இதுவரை இருந்த விதிக்கு பதிலாக புள்ளி பட்டியலில் அணியின் புள்ளிகளை குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இனி வரும் ஐபிஎல் தொடர்களில் இந்த விதியை தொடரும் என தற்போது பிசிசிஐ கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகிற 23ஆம் தேதி தொடங்க உள்ள சென்னை மற்றும் மும்பை இடையிலான போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram