2025 ம் ஆண்டுக்கான ஐ பி எல் தொடர் சிறப்பாகவும் யாரும் எதிர்பார்க்காத வகையில் திருப்பங்களுடன் சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வந்த நிலையில் தொடரை நிறுத்தியது பிசிசிஐ. இந்நிலையில் ரசிகர்கள் பலரும் இந்த தொடர் இதற்கு மேல் நடைபெறாது. இந்த முறையும் rcb அணி கப்பு வெல்லப்போவதில்லை என்று கூறி வரும் நிலையில் மீண்டும் போட்டி தொடங்கவுள்ளது.
வரும் 17 ம் தேதி முதல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ளதாக அட்டவணையை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. இதில் பெரிய திருப்பம் என்னவென்றால் முக்கிய ஒரு சில வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் தொடங்கவுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக பெங்களூரு அணியில் 6 முக்கிய வீரர்கள் விளையாட மாட்டார்கள் என கூறி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் பஞ்சாப் அணியில் தான் அணைத்து இந்திய அணி வீரர்களும் சிறப்பாக விளையாடினார். அதனால் அடுத்து நடைபெறும் போட்டிகளிலும் பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடி இந்த முறை கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் கருது தெரிவித்து வருகின்றனர். மேலும் பெங்களூரு அணி தங்கள் அணியில் முக்கிய வீரர்களை இழந்துள்ளதால் அந்த இந்த முறை கோப்பை வெல்வது மிகவும் கடினம்தான் என கருத்து தெரிவித்து வருகின்றனர். குஜராத் அணியும் சிறப்பாக விளையாடி வரும் நிலையில் இந்த முறை யார் கோப்பை வெல்ல போவது என்பது சற்று யோசிக்க கூடிய ஒன்றாகத்தான் உள்ளது.