மின்னல் தாக்கி இதுவரை 25 பேர் உயிரிழப்பு!! ஜூன் மாத சம்பவம்!!

தற்சமயம் நிலவி வரும் வானிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. பாதி மாவட்டங்களில் ரெட் அலர்ட் ஆரஞ்ச அலர்ட் ஆகியவையும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக அங்கு மின்னல் தாக்கி 25 நபர்கள் உயிரிழந்து உள்ளனர். அதில் ஒரே குடும்பத்தை சார்ந்த நான்கு பேர் அடங்குவர். இதில் ஏழு குழந்தைகள், எட்டு பெண்கள், 10 ஆண்கள் ஆகியோர் உயிரிழந்தனர். அங்குள்ள காஸ்கஞ்ச் மற்றும் பதேபூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

பலத்த காற்று காரணமாக பல இடங்களில் வேரோடு மரங்கள் சாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளன. மேலும் வானிலை மாற்றம் தொடர்வதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்களை பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மழை பேரிடர் காரணமாக உயிரிழந்தவருக்கு உரிய நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், பயிர்கள் சேதம் ஏற்பட்டால் இழப்பீடு அறிக்கை தர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவசர உதவிகளுக்கு பல முன்னேற்பாடுகளையும் மருத்துவமனையில் செய்ய சொல்லி உத்தரவிடப்பட்டுள்ளது. இடி மின்னல் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த உயிரிழப்பு நாளடைவில் அதிகமாகாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram