கிரிக்கெட்: தமிழ்நாடு பிரீமியர் லீக் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் திருப்பூர் அணி கோப்பையை வென்றது.
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் டி என் பி எல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று திருப்பூர் மற்றும் திண்டுக்கல் இரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பவுலிங் செய்ய தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் களம் இறங்க திருப்பூர் தமிழன் அணி தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரராக களம் இறங்கிய சாத்விக் மற்றும் ரகஜா அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினர்
சாதிக் 34 பந்துகளில் 65 ரன்கள் ரகஜா 46 பந்துகளில் 77 ரன்களும் குவித்தனர். அணியின் கேப்டன் சாய் கிஷோர் ஒரு எண்ணில் ஆட்டம் இழந்தாலும் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் குறைவான பந்துகளில் அதிக ரன்களை அடித்ததன் மூலம் 20 ஓவர்களில் 220 ரன்கள் சேர்த்தது திருப்பூர் தமிழன்ஸ் அணி.
திண்டுக்கல் அணியில் அதிகபட்சமாக கார்த்திக் சரண் இரண்டு விக்கெட்டுகளும், பெரியசாமி வருண் சக்கரவர்த்தி புவனேஸ்வர் ஆகியோர் தல ஒரு விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தொடர்ந்து பேட்டிங் களமிறங்கிய திண்டுக்கல் அணி தொடக்கமுதலே சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. அணியின் கேப்டன் அஸ்வின் ஒரு எண்ணில் ஆட்டமெலக்க அடுத்தடுத்து களமிறங்கி இவர்களும் குறைவான ரண்களில் ஆட்டம் இழந்தனர் இதனால் 14 புள்ளி நான்கு ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 102 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் திருப்பூர் அணி கோப்பையை தட்டி சென்றது.