ஒட்டுமொத்த இந்தியாவுக்கே தமிழ்நாடு தான் மாடல்!! முட்டுக்கட்டைகளைத் தகர்த்து சாதனை!! சிவகங்கையில் ஸ்டாலின் ஆவேச முழக்கம்!!

MK Stalin, Dravidian Model, TN Economy 2026.

மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே நிதிப் பகிர்வு தொடர்பாக நீண்ட நாட்களாக மோதல் நிலவி வரும் சூழலில், சிவகங்கையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரை முக்கியத்துவம் பெறுகிறது. “மத்திய அரசு நிதி நெருக்கடிகளைக் கொடுத்தாலும், பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டாலும், அதையெல்லாம் தவிடுபொடியாக்கி விட்டுத் தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறோம்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இதுவரை எட்டாத வளர்ச்சியைத் தமிழகம் இன்று பெற்றுள்ளது” என அவர் முழக்கமிட்டார்.

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், பெண்களுக்கு விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருப்பதை நினைவூட்டினார்.

“நிதி இல்லை என்று கையை விரித்து விடாமல், மாற்று வழிகளை யோசித்துத் தமிழகத்தின் வளர்ச்சியைச் சாத்தியப்படுத்தியுள்ளோம். இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் வெற்றி” என்றார். மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டினாலும், தமிழக அரசு தனது சொந்த பலத்தில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை உருவாக்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். சிவகங்கையில் இன்று தொடங்கி வைக்கப்பட்ட ரூ.2,559 கோடி மதிப்பிலான திட்டங்களே இதற்குச் சாட்சி என அவர் தனது உரையை நிறைவு செய்தார்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram