2026 ஆம் ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 A தேர்வு வருகின்ற ஜூன் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஏற்கனவே ஆன்லைனில் முன்பதிவு வெளியிடப்பட்டிருந்தது. இந்தத் தேர்வானது தமிழ்நாடு மாநில வனப் பகுதிகளுக்கான பணியாளர்கள் இணைப்பதற்கான மாநில அரசால் செயல்படுத்தப்படும் ஒரு தேர்வு அணுகுமுறையாகும். ஆண்டிற்கு ஒருமுறை இந்த தேர்வானது மாநில அரசால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. அதேபோல் இந்த ஆண்டிற்கான தேர்வு தேதி முன்னரே அறிவிக்கப்பட்டு ஆன்லைனில் முன்பதிவும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்சமயம் தேர்வு நெருங்குவதை ஒட்டி ஆன்லைனில் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கு ஹால் டிக்கெட் மிக முக்கியமான ஆவணம் ஆகும். இதனை tnpscexam.in என்ற இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வு ஆணையத்தால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்விற்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், இது தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வு எழுதுவதற்கு இது முக்கிய அங்கம் என்பதால் தவறாது அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.