தமிழக அரசின் பல்வேறு பிரிவினருக்கான TNPSC தேர்வின் மூலம் பணியாளர்களை தேர்ந்தெடுக்கின்றன. இந்த 2025 ஆண்டிற்கான குரூப் 4 தேர்விற்க்கு வருகிற மே 24-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும். மொத்த காலியிடங்கள் 3935 இருப்பதாக தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு வரும் ஜூலை 12 -ம் தேதி நடை பெற உள்ளது. இந்த வாய்ப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான அறிய வாய்ப்பு. இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு ஏற்படுத்தி தருகிறது. TNPSC குரூப் 4 தேர்வு வரும் ஜூலை 12 -ம் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த அறிய வாய்ப்பினை மாற்றுதிறனாளிகளே பயன்படுத்தி கொள்ளுங்கள். சென்னையில் உள்ள இந்த TNPSC தேர்வாணையம் மூலம் பணியாளர்களை நிரப்புகிறது. அதன்படி இந்த ஆண்டு 3935 இடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது .
குரூப் 4 குறைந்தபட்ச தகுதி 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருப்பது போதுமானது ஆகும் . மேலும் அதற்கான அதிகபட்சம் தகுதியான பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் . பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறப்போகும் விண்ணப்பித்தார்களும் இதற்கு தகுதி பெற்றவர்கள் என அந்த தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும் பதினெட்டு வயது நிரம்பியவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். TNPSC தேர்வானது வருகின்ற 12.07.2025 அன்று நடைபெறும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பயிற்சி வகுப்பினை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த பயிற்சிக்கான இலவச சிறப்பு வகுப்புகள் வரும் மே 12 -ம் தேதி ஆரம்பிக்கவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை நடத்தப்படும். மேலும் நேரம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்தப்படும் .
இந்த தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://chennai.nic./_ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க தேவையான படிவங்களான விண்ணப்ப படிவ நகலுடன் ஆதார் அட்டை நகல் ,பாஸ்போர்ட் அளவில் உள்ள புகைப்படத்துடன் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், கிண்டி ,சென்னை-32 மேலும் முக்கிய குறிப்பு சென்னை சேர்ந்த தகுதி பெற்ற மாற்றுத்திறனாளிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.