இந்த காலகட்டத்தில் பணத்தை வாங்கியவர்களை விட பணத்தை கொடுத்தவர்கள் தான் கடன் காரர்களாக இருக்கிறார்கள் அந்த வகையில் கொடுத்த பணத்தை பெற முடியாமல் திக்கு முக்காடும் நபர்கள் அனைவரும் ஆன்மீக ரீதியாக பரிகாரம் செய்யும் பொழுது நீங்கள் நினைக்கும் நபரிடமிருந்து உங்களது வீடு தேடி உங்கள் கைக்கு பணம் வந்து சேரும். அந்த வகையில் கடன் கொடுத்தவர்கள் மட்டுமின்றி கைமாறாக பணம் கேட்டு தற்போது வரை இழுத்தடிக்கும் நபர்களுக்கும் இந்த பரிகாரம் பொருந்தும்.
பரிகாரம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
கருப்பு உளுந்து
சுத்தமான பசுந்தயிர்
பரிகாரம் செய்யும் முறை:
இந்த பரிகாரத்தை அமாவாசை முடிந்த பிறகு தொடர்ந்து வரும் சனிக்கிழமையில் செய்ய வேண்டும்.
முதலில் பரிகாரம் செய்வதற்கும் முந்தைய இரவே ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் கருப்பு உளுந்து போட்டு அது மூழ்கும் அளவிற்கு பசுந்தயிர் ஊற்ற வேண்டும்.
பின்பு மறுநாள் சனிக்கிழமை அன்று காலையில் எழுந்ததும் குளித்து முடித்துவிட்டு நன்றாக ஊறிய கருப்பு உளுந்து பசுந்தயிர் சேர்ந்த கலவையை அரச மரத்தின் வேர் பகுதியில் போட வேண்டும்.
இந்த பரிகாரம் செய்து முடிக்கும் வரை நீங்கள் எந்த நபரிடம் இருந்து பணத்தை பெற நினைக்கிறீர்களோ அந்த பணம் கட்டாயம் கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.
இந்த பரிகாரத்தை தொடர் 8 வாரம் செய்துவர கட்டாயம் நீங்கள் நினைத்தவர்களிடமிருந்து உங்களது பணம் வீடு தேடி வந்து சேரும்.