பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய ஊழியர்களுக்கு அவர்களின் சம்பவத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிஎப் பணமாக இப்படித்தான் செய்யப்படுகிறது. இவ்வாறு பிடித்தம் செய்யப்படக்கூடிய தொகையானது தங்களுடைய வாழ்வின் முக்கிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான தொகையாக அமைந்து வருகிறது.
இவ்வாறு பிடித்தம் செய்யப்படக்கூடிய பிஎஃப் தொகையானது எவ்வளவு படித்தம் செய்யப்படுகிறது. அதில் எவ்வளவு சேமித்து வைக்கப்படுகிறது. மாதா மாதம் இதற்கான வட்டி எவ்வளவு என்பது போன்ற பல கேள்விகள் நிறுவனங்களில் வேலை பார்க்கக் கூடியவர்களின் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக நம்முடைய பிஎஃப் பாலன்ஸை அடிக்கடி செக் செய்து கொள்வது நமக்கு நன்மை பயக்கக்கூடிய ஒன்றாக மாறும்.
பிஎஃப் பேலன்ஸை தெரிந்து கொள்வதற்கு அரசு அலுவலகங்களுக்கு அல்லது இ சேவை மையங்களுக்கோ செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இப்பொழுது உள்ள காலகட்டத்தில் அனைத்தையும் இருந்த இடத்திலேயே ஆண்ட்ராய்டு மொபைல் மூலமாக நம்மால் அறிந்து கொள்ள முடியும். அதுபோலவே பிஎஃப் தொகையையும் கணக்கில் உள்ள இருப்பையும் தெரிந்து கொள்ள மிஸ்டு கால் கொடுத்தால் மட்டுமே போதும்.
PF அக்கவுண்ட் இருக்கு மிகவும் தேவையான UAN உடன் உங்களுடைய மொபைல் எண் இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறு இணைக்கப்பட்டிருந்தால் தான் உங்களால் மிஸ்டு கால் மூலம் PF தொகை குறித்த முழு விவரத்தையும் அறிந்து கொள்ள முடியும். முதலில் 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் உங்களுடைய மொபைலுக்கு SMS மூலமாக பிஎப் அக்கவுண்டில் இருக்கக்கூடிய தொகையில் விவரம் கிடைக்கும்.
மிஸ்டு கால் மூலம் தெரிந்து கொள்ள முடியவில்லை என்றால் உடனடியாக 7738299899 என்ற நம்பருக்கு SMS அனுப்புவதன் மூலமும் உங்களால் உங்களுடைய பி எஸ் தொகையில் உங்களால் உங்களுடைய பி எஸ் கணக்கில் இருக்கக்கூடிய தொகையின் விவரங்களை அறிய முடியும்.