கடந்த மூன்று நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சராசரியாக குறைந்து வருகின்றது. இது மக்களிடையே மகிழ்ச்சியை உண்டு பண்ணுகிறது. இருந்தாலும் எப்போ எப்படி ஏறும் என்று தெரியவில்லை என்று கவலைப்படுகிறார்கள். இப்பொழுது விலை விபரம் குறித்து காணலாம். சென்னை நிலவரப்படி, 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹.8684. நேற்றைய விலை 8,738 ரூபாய். நேற்றை விட இன்று 54 ரூபாய் குறைவாக காணப்படுகிறது. 24 காரட் ஒரு சவரத்தின் விலை ₹.69,472. இது நேற்றைய விலையை விட ரூபாய் 432 குறைந்து விற்கப்படுகின்றது.
22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹.7960. நேற்றே விலை 8010 ஆக இருந்த நிலையில் 50 ரூபாய் குறைவாக விற்கப்படுகின்றது. 22 காரட் தங்கத்தின் ஒரு பவுனின் விலை ₹.63,680. இது நேற்றைய விலையை கம்பேர் செய்கையில் 400 ரூபாய் கம்மியாகி உள்ளது. அதைப்போல் வெள்ளியும் சற்று சரிவை கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ஆனது ₹. 105. இது நேற்றைய விலையை விட கிராமிற்கு ஒரு ரூபாய் குறைந்துள்ளது. கிலோவிற்கு ஆயிரம் குறைந்துள்ளது.


