மேஷம்
பண வரவு கூடும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.
கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவழிப்பீர்கள்.
சுற்றுலா பயணம் திருப்தி தரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்
எடுத்த வேலையை முடிக்க இன்று சற்று அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்.
குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம்.
பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. ஆன்மிக நாட்டம் கூடும்.
மிதுனம்
தாமதமாகி வந்த திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்.
பிள்ளைகள் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.
உறவினர்களுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பழுதான வாகனத்தைச் சரிசெய்வீர்கள்.
கடகம்
வீண் குழப்பங்கள் விலகி, வீட்டில் நிம்மதி பிறக்கும்.
எதிர்பாராத பணவரவு இருக்கும். பழைய கடன் பிரச்சினையைத் தீர்க்க வழி பிறக்கும்.
சகோதர வகையில் சுபச் செலவு உண்டு. உடல்நலம் சீராகும்.
சிம்மம்
இன்று உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். மரியாதை, பதவி, கௌரவம் கூடும்.
மாமியார் உறவு மேம்படும். புதிய நபர்களின் ஆலோசனையின் பேரில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.
பெற்றோரின் ஆசிர்வாதத்துடன் முக்கியமான வேலைகளைச் செய்து முடிப்பீர்கள்.
கன்னி
சில முக்கியமான விஷயங்களுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் இருக்கும்.
அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவது தொடர்பாக செலவுகள் அதிகரிக்கும். நிதிநிலை சற்றே கவலை தரக்கூடியதாக இருக்கலாம்.
குழந்தைகளிடம் இருந்து சில நல்ல செய்திகள் பெறுவீர்கள்.
துலாம்
வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் தாமதமாகலாம்.
சவாலான காரியங்களில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் ஈடுபடுவது நல்லது.
விருச்சிகம்
முன்வைத்த காரியத்தில் வெற்றி நிச்சயம். பண வரவு தாராளமாக இருக்கும்.
உறவினர்கள், நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள்.
உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும்.
தனுசு
முன்கோபத்தைத் தவிர்த்து, உணர்ச்சிவசப்படாமல் இருப்பது அவசியம். அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கவும்.
குடும்பத்தில் நிம்மதி உண்டு. பழுதான வாகனத்தால் கையிருப்பு கரையும்.
வாகனப் பயணத்தில் அதிக கவனம் தேவை.
மகரம்
எவ்வளவு சவாலான காரியங்களையும் இன்று சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள்.
செல்வம், செல்வாக்கு கூடும். போட்டிகள் மற்றும் விவாதங்களில் வெற்றி கிடைக்கும்.
உயர் அதிகாரிகளால் ஆதாயம் உண்டு. மனதில் தைரியம் பிறக்கும்.
கும்பம்
நம்பிக்கையும், தைரியமும் கூடும். நீங்கள் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.
சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். எதிர்பாராத வகையில் பணம் வரும்.
விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். பழைய நண்பர்கள், உறவினர்கள் உதவுவார்கள்.
மீனம்
பால்ய நண்பர்கள், உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.
பழைய கடன்களைப் பற்றிச் சிந்திப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
உத்தியோகத்தில் நிம்மதி இருக்கும். இன்று புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.


